இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் பல போராட்டத்திற்குப் பின்பு அந்நாட்டின் புதிதாகப் பிரதமராக ஷெஹ்பாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒரு சர்ச்சைக்குரிய தேர்தலுக்குப் பிறகு பணமில்லாமல் தவிக்கும் பாகிஸ்தான் பொருளாதாரத்தை எப்படியாவது மேம்படுத்த வேண்டுத்த வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் பழைய ஆட்களை ஓரம் கட்டிவிட்டு புதிதாக ஒருவரை நிதியமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு ஜேபி மோர்கன் சேஸ் & கோ நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் வங்கியாளரை நிதியமைச்சராகத் தேர்ந்தெடுத்துள்ளது.
முகமது ஔரங்கசீப், 59 வயதான இவர் பாகிஸ்தான் நாட்டின் நிதியமைச்சர் பதவியில் நியமிக்கப்பட்டு உள்ளார். பாகிஸ்தான் நிதி அமைச்சகம் X பதிவின் மூலம் இதை உறுதிப்படுத்தியுள்ளது. முகமது ஔரங்கசீப் முன்னதாக டெபாசிட் அடிப்படையில் பாகிஸ்தான் நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஹபீப் பேங்க் லிமிடெட்-ன் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய நிதியமைச்சர் முகமது ஔரங்கசீப்-க்கு கடுமையான சவால்கள் அடுத்தடுத்து காத்திருத்திருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து குறைந்தபட்சம் 6 பில்லியன் டாலர் கடனைப் பெறுவது, பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக திட்டங்களை தீட்டுவது, பணவீக்கம் மற்றும் மந்தமான வளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள சந்தையை மீட்டு எடுப்பது ஆகிய சவால்கள் உள்ளது.
அடுத்த மாதம் முடிவடையும் IMF-ன் 1.1 பில்லியன் டாலர் திட்டத்தின் இறுதித் தொகையைப் பாகிஸ்தான் பெற வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளது. இதேவேளையில் பாகிஸ்தானின் $1 பில்லியன் டாலர் மதிப்பிலான பத்திரங்கள் ஏப்ரல் மாதத்திலும் முதிர்ச்சியடைகின்றன, இதற்கான நிதியை திரட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது பாகிஸ்தான்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்-ன் நீண்டகால கூட்டாளியான இஷாக் தார் மற்றும் பாகிஸ்தான் மத்திய வங்கியின் முன்னாள் கவர்னர் ஷம்ஷாத் அக்தர் உள்ளிட்ட சாத்தியமான வேட்பாளர்கள் ஓரம்கட்டப்பட்டு அவுரங்கசீப் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிங்கப்பூரில் உள்ள ஜேபி மோர்கனின் குளோபல் கார்ப்பரேட் வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த முகமது ஔரங்கசீப், கடந்த ஆறு ஆண்டுகளாக ஹபீப் வங்கியின் தலைவராக இருந்த ஒரு அனுபவமிக்க வங்கியாளர் ஆவார்.


Click it and Unblock the Notifications