பங்குச் சந்தையில் தீபாவளியை முன்னிட்டு ஒரு சிறப்பு வர்த்தகம் ஆரம்பிக்கப்படும். தீபாவளி சிறப்பு வர்த்தகம் என்பது இந்தியாவில் வணிகர்கள் பின்பற்றும் ஒரு பொதுவான சடங்கு ஆகும். இதற்கான வர்த்தகம் ஒரு மணிநேரம் ஆகும். இது தீபாவளி நாளில் பங்குகளில் முதலீடு செய்வதற்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது. பங்குச் சந்தை ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி சிறப்பு வர்த்தகத்தின் நேரத்தைக் குறிப்பிடுகிறது. அந்த வகையில் இந்தாண்டு தீபாவளி நேரம், தேதி எப்போது வெளியிட்டுள்ளது என்பதை காணலாம்.
இந்தி வார்த்தையான 'முஹுரத்' என்றால் 'மங்களகரமான நேரம்' என்று பொருள். இந்த தீபாவளி சிறப்பு வர்த்தகம் புதிய நிதித் திட்டங்களைத் தொடங்குவதற்கு அதிர்ஷ்டமாகக் கருதப்படுகிறது. இதனால், முதலீட்டாளர்கள் வரும் ஆண்டு தங்களுக்கு சிறந்த ஆண்டாக அமையும் என்ற நம்பிக்கையுடன் இருப்பார்கள். இது பங்குச் சந்தைகள் மீதான நம்பிக்கையையும், வரும் ஆண்டில் செழிப்பான வளர்ச்சியின் தொடக்கமாக அமையும் என கருதுகின்றனர்.

அதற்காக, இந்திய பங்குச் சந்தையில் ஒவ்வொரு ஆண்டும், பங்குச் சந்தைகள் தீபாவளி சிறப்பு வர்த்தகத்திற்கு ஒரு மணிநேரத்திற்கான வர்த்தகங்களை அறிவிக்கின்றன.இந்த தீபாவளி சிறப்பு வர்த்தகம் என்பது புதிய இந்து நாட்காட்டி ஆண்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது. அந்த வகையில் தீபாவளியின் போது இந்திய பங்குச் சந்தைகளில் நடைபெறும் ஒரு முக்கிய சிறப்பு வர்த்தகம் ஆகும்.
இந்த சிறப்பு வர்த்தகமானது நிதி ஆண்டின் தொடக்கமாக முதலீட்டாளர்கள் கருதுவதால் அதிக எண்ணிக்கையிலான முதலீட்டாளர்களை ஈர்க்கிறது. இதனால், பங்குச் சந்தைகள் இந்த நேரத்தில் பலம் பெறுகிறது. அத்துடன் வரவிருக்கும் ஆண்டில் செழிப்பின் ஆரம்பமாக பார்க்கப்படுகிறது.
தீபாவளி சிறப்பு வர்த்தக நேரம்: தீபாவளி சிறப்பு வர்த்தக நேரம் பொதுவாக மாலையில் இருக்கும். இந்து வர்த்தகர்களும் முதலீட்டாளர்களும் இந்த வர்த்தக நேரத்தில் தேசிய பங்குச் சந்தை (NSE) மற்றும் மும்பை பங்குச் சந்தை (BSE) ஆகிய இரு பங்குச் சந்தைகளிலும் பங்குகளை வாங்கி விற்பார்கள்.
இந்த நேரத்தில், பல முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் வர்த்தகம் செய்வது, ஆண்டு முழுவதும் செல்வத்தையும் செழிப்பையும் கொண்டு வரும் என்று நினைக்கிறார்கள்.
மும்பை பங்குச் சந்தையில் தீபாவளி சிறப்பு வர்த்தகம் 2024:BSE இன் வலைத்தளத்தின்படி, தீபாவளி சிறப்பு வர்த்தகம் நவம்பர் 01,2024 அன்று நடைபெறும். இதற்கான நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளது. அத்துடன் இந்த குறிப்பிட்ட தேதியில் மாற்றம் இருக்கலாம் என்றும், இதற்கான சுற்றறிக்கை முன்கூட்டியே அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளது.
தேசிய பங்குச் சந்தையில் தீபாவளி சிறப்பு வர்த்தகம் 2024:NSE இன் வலைதளத்தின்படி, தீபாவளி சிறப்பு வர்த்தகத்தின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications