இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் தனிப்பட்ட கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் கொண்டிருக்கும் வேளையில், விழாக்களும், கொண்டாட்டமும் மாறுப்படும். இந்த நிலையில் நாடு முழுக்க கொண்டாடப்படும் விழாக்கள் வெகு சில மட்டுமே. இப்படி இந்திய மக்கள் அனைவரும் கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகையாக விளங்குவது தீபாவளி.
இந்த தீபாவளி தினம் கொண்டாட்டத்திற்கு எவ்வளவு முக்கியமோ அதேவேளையில் முதலீட்டுக்கு முக்கியம். தீபாவளி பண்டிகை நாளில் பங்குச்சந்தைகள், முதலீட்டு சந்தைகள் விடுமுறை என்றாலும், ஒரு மணிநேரம் சிறப்பு வர்த்தகம் நடக்கும். தீபாவளி தினம் செல்வத்திற்கான அதிபதி லட்சுமி தேவியின் திருநாளாக பார்க்கப்படும் காரணத்தால் ஒவ்வொரு வருடமும் ஒரு மணிநேரம் முகூர்த்த வர்த்தகம் நடக்கும்.

தேசிய பங்கு பரிவர்த்தனை (NSE) மற்றும் மும்பை பங்கு பரிவர்த்தனை (BSE) ஆகியவை அக்டோபர் 21, 2025 அன்று மதியம் 1:45 முதல் 2:45 மணி வரை ஒரு மணி நேர சிறப்பு வர்த்தக அமர்வை நடத்துகின்றன. இந்த அமர்வு, 'முகூர்த்த வர்த்தகம்' என்று அழைக்கப்படுகிறது.
இந்து புராணங்களின்படி, செல்வத்தின் தெய்வமான லட்சுமி மற்றும் தடைகளை நீக்கும் கணபதியின் ஆசிகளைப் பெறுவதற்கு இந்த நாள் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. முதலீட்டாளர்கள் இந்த அமர்வை புதிய வர்த்தகங்களைத் தொடங்குவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக பயன்படுத்துகின்றனர், இது முதலீட்டு வளர்ச்சிக்கும் லாபத்தை பெறவும் நல்ல தொடக்கத்தை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை தாண்டி இந்து நிதியாண்டின் தொடக்கமாகவும் திகழ்கிறது. அக்டோபர் 21ஆம் தேதி சம்வத் 2082 துவங்குகிறது, இதை வர்த்தகர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் லாபகரமானதாக மாற்றும் நோக்கிலேயே இந்த சிறப்பு வர்த்தகம் காலம் காலமாக நடத்தப்படுகிறது.
விக்ரமாதித்யா மன்னரால் கி.மு. 57-ல் தொடங்கப்பட்டது தான் இந்த இந்து நாட்காட்டி, புதிய ஆண்டான சம்வத் 2082-ஐ குறிக்கும் விதமாக முகூர்த்த வர்த்தகம் நடைபெறுகிறது. இந்த ஒரு மணி நேர முகூர்த்த வர்த்தக அமர்வு, பல்வேறு பிரிவுகளில் நடைபெறுகிறது.
இதில் ஈக்விட்டி, கமாடிட்டி, டெரிவேட்டிவ்ஸ், கரன்சி டெரிவேட்டிவ்ஸ், ஈக்விட்டி பியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ், செக்யூரிட்டீஸ் லெண்டிங் அண்ட் பாரோயிங் வர்த்தகம் என அனைத்தும் நடக்கும். இந்த அனைத்து வர்த்தகங்களும் ஒரே நேரத்தில், அதாவது மதியம் 1:45 முதல் 2:45 மணி வரை நடைபெறும்.
இந்த முகூர்த்த வர்த்தகம், பொதுவாக குறைந்த அளவு வர்த்தகத்தைக் கொண்டிருந்தாலும், வலுவான லாபத்தை அளிக்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் அமைகிறது. பல வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்கள் இந்த நாளில் திட்டமிட்டு நீண்ட காலம் மற்றும் கட்டாயம் லாபம் ஈட்டும் பங்குகளில் முதலீடு செய்யும் காரணத்தால் விற்பனை குறைவாக இருக்கும். இதனால் பெரும்பாலான வர்த்தகம் லாபத்துடனே முடிவடைந்துள்ளது.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications