Mumbai Indians இருக்கட்டும்.. புதுசா ஒரு டீம்-ஐ வளைத்துபோட்ட முகேஷ் அம்பானி.. எந்த டீம் தெரியுமா..?

இந்தியாவில் ஐபிஎல் தொடரை போல் இங்கிலாந்தில் The Hundred லீக் நடத்தப்பட்டு வருகிறது. இங்கிலாந்து நடத்தப்பட்டு வரும் The Hundred லீக் தொடர் ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை. 100 பந்துகளை மட்டுமே கொண்டு நடத்தப்பட்டு இந்த லீக் தொடரில், சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்ற போது, அந்தந்த அணிகளுக்கு பெரியளவில் லாபம் கிடைக்கவில்லை. இதன் 100 சதவிகித பங்குகள் இங்கிலாந்து அணி நிர்வாகத்திடம் உள்ளது.

இதனால் ஹன்ட்ரட் லீக் தொடரில் விளையாடி வரும் அணிகளில் முதலீடு செய்வதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுத்து வந்தது. குறிப்பாக ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் ஹன்ட்ரட் லீக் தொடரில் முதலீடு செய்தால், நிச்சயம் அந்தந்த அணிகள் அடுத்தக் கட்ட வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் என்பதே இதன் நோக்கம்.

Mumbai Indians இருக்கட்டும்.. புதுசா ஒரு டீம்-ஐ வளைத்துபோட்ட முகேஷ் அம்பானி.. எந்த டீம் தெரியுமா..?

இந்த நிலையில் ஹன்ட்ரட் லீக் தொடரில் முதலீடு செய்வதற்கான முதற்கட்ட பணிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணிகளின் 49 சதவிகித பங்குகளை விற்பனை செய்ய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு எடுத்துள்ளது. அந்தவகையில், அம்பானி குடும்பம் , இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் The Hundred team ஓவல் இன்வின்சிபிள் நிறுவனத்தின் 49% பங்குகளை 60.27 மில்லியன் பவுண்டுகளுக்கு வாங்கியுள்ளது. இந்த Invincibles முழு ஏலத்தின் முழு மதிப்பீடு £120 மில்லியனாக மதிப்பிடப்பட்டது, இதில் ரிலையன்ஸ் சுமார் £60 மில்லியன் முதலீடு செய்துள்ளது.

ஓவல் இன்வின்சிபிள்ஸ் ஆண்கள் அணியான The Hundred team தற்போதைய சாம்பியனாக உள்ளது, இரண்டு முறை பட்டத்தை வென்றுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் CVC கேபிட்டல் மற்றும் சிலிக்கான் வேலி தொழில்முனைவோர்களின் கூட்டமைப்பு ஆகிய இரண்டையும் ஏலம் எடுத்தது. இந்த ஏலம் எடுத்ததன் மூலம் ரிலையன்ஸ் நிர்வாகத்தின் கீழ் ஆறாவது அணியாக ஓவல் இன்வின்சிபிள்ஸின் The Hundred மாறியுள்ளது.

ஏற்கனவே, மும்பை இந்தியன்ஸ் (ஐபிஎல் மற்றும் டபிள்யூபிஎல்) எம்ஐ கேப் டவுன் (எஸ்ஏ20, தென்னாப்பிரிக்கா), எம்ஐ எமிரேட்ஸ் (ஐஎல்டி20, யுஏஇ), மற்றும் எம்ஐ நியூயார்க் (மேஜர் லீக் கிரிக்கெட், யுஎஸ்ஏ) உள்ளிட்ட பல லீக்குகளில் இந்த பிராண்ட் துணை நிறுவனங்களாக விளங்கி வருகிறது. கூகுள் நிறுவனர் சுந்தர் பிச்சை மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் சத்ய நாதெல்லா உட்பட தொழில்நுட்ப கோடீஸ்வரர்கள் குழுவுடன் போட்டியிட்டு மும்பை இந்தியன்ஸ் உரிமையாளர்கள் வெற்றி பெற்றனர். ஓவல் இன்வின்சிபிள்ஸ் ஆடவர் அணிக்கு, சாம் கரன் கேப்டனாகவும், கஸ் அட்கின்சன் போன்ற இங்கிலாந்து சர்வதேச வீரர்களையும் கொண்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+