இந்திய பங்குச்சந்தைகள் சரிவு பாதையில் இருந்து மீண்டு வளர்ச்சி பாதையை நோக்கி திரும்பியுள்ளன. இதனால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்புகள் மற்றும் சந்தை மூலதன மதிப்பு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக கடந்த ஐந்து நாட்களில் மட்டும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பில் 39 ஆயிரம் கோடி ரூபாய் சேர்ந்து இருக்கிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்தியாவிலேயே அதிக மூலதன மதிப்பு கொண்ட ஒரு நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஹெச்டிஎஃப்சி வங்கியும், மூன்றாவது இடத்தில் டிசிஎஸ் நிறுவனமும், நான்காவது இடத்தில் ஏர்டெல் நிறுவனமும் இருக்கின்றன. இந்திய பங்குச் சந்தைகள் கடந்த ஆறு மாதங்களாக சரிவுப் பாதையில் இருந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக மீண்டும் வளர்ச்சி பாதையை நோக்கி திரும்பி உள்ளன.

இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களின் பங்கு மதிப்பும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் முக்கியமான பத்து நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பில் 3 லட்சம் கோடி ரூபாய் சேர்ந்திருக்கிறது. இதில் ஐசிஐசிஐ வங்கி மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் கணிசமான அளவு உயர்ந்து பெரிய பங்களிப்பை தந்துள்ளன.
பங்குச்சந்தை தொடர்பாக வெளியாகியுள்ள தரவுகளின் படி பார்க்கும்போது கடந்த ஒரு வார காலத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 4.16 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அதேவேளையில் தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண் நிப்டி 4.25% உயர்ந்திருக்கிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தை பொருத்தவரை கடந்த ஒரு வார காலத்தில் 66 , 988 கோடி ரூபாய் கூடுதலாக சேர்ந்து அதன் மொத்த சந்தை மூலதன மதிப்பு 16 ,90,000 ஆயிரம் கோடியாக அதிகரித்திருக்கிறது.
ஒட்டுமொத்தமாக பங்குச்சந்தை மதிப்பு உயர்வதற்கு இந்த நிறுவனத்தின் பங்களிப்பு அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. முகேஷ் அம்பானியை பொருத்தவரை ரிலையன்ஸின் பங்கு மதிப்பு உயர்ந்ததால் அவருடைய சொத்து மதிப்பில் 39,000 கோடி ரூபாய் சேர்ந்து மார்ச் 23ஆம் தேதி நிலவரப்படி அவருடைய சொத்து மதிப்பு 95 பில்லியன் டாலர்கள் என்ற நிலையில் இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராகவும் உலக அளவில் 18ஆவது பணக்காரராகவும் அவர் தொடர்ந்து தன்னுடைய இடத்தை தக்க வைத்திருக்கிறார்.
மார்ச் 24ஆம் தேதி நிலவரப்படி ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 1302 ரூபாய் என்ற வர்த்தகமானது. கடந்த 5 நாட்களில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 4.90 சதவீதம் உயர்வு கண்டுள்ளது.
More From GoodReturns

அந்தர் பல்டி அடித்த அதானி டோட்டல் கேஸ் பங்குகள்.. முதலீட்டாளர்கள் ஷாக்..!!

கதறி கதறி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. ஈரான் போரின் கோரமுகம் இந்தியாவில் எதிரொலி..!!

Sensex: ஒன்னில்ல இரண்டில்ல.. 9 லட்சம் கோடி இழப்பு.. தேம்பி தேம்பி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!!

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!

போருக்கு நடுவில் குத்தாட்டம்! சென்செக்ஸ் 2350 புள்ளிகள் உயர உண்மை காரணம் என்ன? பங்குகளில் முதலீடு செய்யலாமா?

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!



Click it and Unblock the Notifications