முகேஷ் அம்பானியின் டெலிகாம் நிறுவனமான ஜியோ நிறுவனத்தின் ஐபிஓவை பங்குச் சந்தையில் வெளியிட திட்டமிட்டுளார். அதன்படி இதற்கான ஐபிஓ வெளியீடு வரும் 2025 ஆண்டு இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஐபிஓ இந்தியாவில் இதுவரை இல்லாத அளவான சுமார் 100 பில்லியன் டாலர் மதிப்பீடுகளை கொண்டதாக இருக்கும். அதேபோல், சில்லறை வணிகமான ரிலையன்ஸ் ரீடெயில் ஐபிஓவை இதற்கு அடுத்தபடியாக தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் வெளியிடப்பட்ட மிகப்பெரிய ஐபிஓ ஆன ஹூண்டாய் மோட்டர்ஸின் 3.3 பில்லியன் ஐபிஓ சாதனையை விட ரிலையன்ஸ் ஜியோ ஐபிஓ அதிகமானதாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், கடந்த சில ஆண்டுகளில் ரிலையன்ஸ் நிறுவனமானது, கேகேஆர், ஜெனரல் அட்லாண்டிக் மற்றும் அபுதாபி முதலீட்டு ஆணையம் போன்றவற்றிலிருந்து டிஜிட்டல், தொலைதொடர்பு மற்றும் சில்லறை வணிகங்களுக்காக மொத்தமாக 25 பில்லியன் டாலர்களை திரட்டியது. கடந்த 2019 ஆம் ஆண்டில் 5 ஆண்டுகளுக்கு ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் ஆகியவற்றை பட்டியலிடுவதாக முகேஷ் அம்பானி அறிவித்திருந்தார்.
தற்போது, 479 மில்லியன் சந்தாதாரர்களுடன் இந்தியாவின் நம்பர் 1 டெலிகாம் நிறுவனமாக, நிலையான வணிகம் மற்றும் வருவாயை நிறுவனம் பெற்றுவிட்டதாக நம்பப்படுவதால் வரும் 2025 ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் ஜியோ ஐபிஓவை தொடங்குவதற்கான திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, கூகுள், மெட்டா ஆகியவற்றில் ஏற்கனவே கூட்டு சேர்ந்துள்ள ஜியோ ஏஐ உட்கட்டமைப்பை மேம்படுத்த என்விடியாவுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதற்கிடையில், எலான் மஸ்க் இந்தியாவின் தனது ஸ்டார்லிங்க் இணைய சேவையை தொடங்கினால், அதனுடனும் கூட்டு சேரலாம் என்று கூறப்படுகிறது.
இதுவரை ஐபிஓ சந்தைகளில் அக்டோபர் மாத்த்திற்குள் 270 நிறுவனங்கள் இந்த ஆண்டு இந்திய ஐபிஓக்களில் இருந்து 12.58 பில்லியன் டாலர்களை திரட்டியுள்ளன. இது 2023 ஆம் ஆண்டில் திரட்டப்பட்ட 7.42 பில்லியன் டாலர்களை விட அதிகமாகும்.
ரிலையன்ஸ் உள்நாட்டில் 3,000 பல்பொருள் அங்காடிகள் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய மளிகைக் கடை சில்லறை விற்பனைப் பிரிவை அதிகரிக்க செய்ய நிறுவனம் மிக வேகமாக வளர்ந்துவரும் இ-காமர்ஸ் உட்பட பல்வேறு சில்லறை விற்பனையில் களமிறங்கியுள்ளது. ரிலையன்ஸ் ரீடெய்ல் ஆனது, ஃபேஷன், மளிகை மற்றும் எலக்ட்ரானிக் கடைகளை கொண்ட வணிகமாகும். மேலும் இது அமேசானை விட சிறந்து விளங்க கடந்த சில ஆண்டுகளில் இ-காமர்ஸ் வணிகத்திலும் நுழைந்துள்ளது. விரைவான வர்த்தகத்தில் ரிலையன்ஸ் தனது ஆதிக்கத்தை செலுத்த நிறுவனம் இப்போது வேகமான டெலிவரிகளாக செய்து வருகிறது. இது புதிய ஷாப்பிங் அனுபவத்தில் இதன் தயாரிப்புகளை 10 நிமிடங்களில் டெலிவரி செய்யும் என கூறப்படுகிறது.
ரிலையன்ஸ் ரீடெயில் ஜூலை-செப்டம்பரில் ஆண்டு விற்பனையில் 1.1% சரிவை அறிவித்தது. அதன் முதல் காலாண்டு விற்பனை கடந்த 3 ஆண்டுகளில் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் விரைவான வர்த்தக சேவைகளின் போட்டி காரணமாக, சூப்பர்மார்க்கெட் விற்பனை இதன் பங்குகளை சரிய செய்துள்ளது
டெலிகாம் மற்றும் டிஜிட்டல் வணிகங்களைக் கொண்ட ஜியோ கடந்த சில ஆண்டுகளில் 17.84 பில்லியன் டாலர்களை திரட்டியது. இதில், 33% பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வைத்துள்ளனர். அதே காலகட்டத்தில் ரிலையன்ஸ் ரீடெய்ல் சுமார் 12% பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்று சுமார் 7.44 பில்லியன் டாலர்களை திரட்டியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications