ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானிக்குச் சொந்தமாக துபாயின் பாம் ஜூமைராவில் ரூ.640 கோடி மதிப்பில் ஒரு வில்லா வீடு உள்ளது. 97.6 பில்லியன் டாலருக்கு அதிபதியான முகேஷ் அம்பானிதான் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர். போர்ப்ஸ் மதிப்பின்படி உலக பில்லியனர்கள் பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளார்.
ரிலையன்ஸ் போர்டில் இருந்து நீதா அம்பானி விலகி விட்டார். அவர் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவராகத் தொடர்ந்து நீடிப்பார்.

இந்த நிலையில் ஈஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி ஆகியோரை இயக்குநர்களாக நியமித்துள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அறிவித்துள்ளது.

முகேஷ் அம்பானிக்கும் நீதா அம்பானிக்கும் சொந்தமாக மும்பையில் இந்தியாவிலேயே விலை உயர்ந்த வீடு உள்ளது. அதன் பெயர் ஆன்டிலா. இந்த வீட்டின் மதிப்பு ரூ.15,000 கோடி. இதுதவிர முகேஷ் அம்பானிக்கு லண்டனில் உள்ள ஸ்டோக்ஸ் பார்க்கில் ஒரு வீடு உள்ளது.

இந்த நிலையில் 2022 ஏப்ரலில் துபாயின் கடலோரம் அமைந்துள்ள வில்லாவை கானர் மெக்காய் பெல்லிவியூ ரியல் எஸ்டேட்டிடம் இருந்து 80 மில்லியன் டாலருக்கு வாங்கினார். துபாயில் ரியல் எஸ்டேட் மார்க்கெட் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் இந்த விற்பனை நடந்துள்ளது.
பெல்லிவியூ ரியல் எஸ்டேட் கம்பெனியின் யூடியூப் விடியோவில் சுமார் 33,000 சதுர அடி பரப்பில் விரிந்து கிடக்கும் வில்லாவை பார்க்கலாம். இதில் பல அதிநவீன வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. 10 பெட்ரூம்கள், பிரைவேட் ஸ்பா, இண்டோர் மற்றும் அவுட்டோர் நீச்சல்குளங்கள் உள்ளன. மேலும் இந்த வீட்டில் மாடர்னான வசதிகளுடன் ஒரு திறந்தவெளி கிட்சனும் உள்ளது.

இன்டீரியர்கள் இத்தாலிய மார்பிள்களாலும் கலைப்பொருட்களாலும் மெருகூட்டப்பட்டுள்ளது. லிவிங் ரூம்களில் கண்ணைக் கவரும் விளக்குகள் ஜொலிக்கின்றன. ஒரு பில்லியனர் குடும்பத்துக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இந்த வீட்டில் உள்ளன. இத்துடன் 70 மீட்டர் நீளமான பிரைவேட் கடற்கரையும் உள்ளது.
மிகப்பெரிய இந்த வில்லா தான் துபாயில் விற்கப்பட்ட விலை மதிப்பான வில்லாவாகும். ரியல் எஸ்டேட் சாம்ராஜ்ஜியத்தின் மூலம் அம்பானி குடும்பம் உலகம் முழுவதும் தங்களது இருப்பை விரிவுபடுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications