Forbes அதன் 2023 இன் டாப் 10 பில்லியனர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியா மற்றும் ஆசியாவின் பணக்காரர் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார் என ஃபோர்ப்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, 65 வயதான முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 83.4 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளார்.
100 பில்லியன் டாலர்!
சென்ற ஆண்டு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ஆயில்-டு-டெலிகாம் நிகர வருவாய் 100 பில்லியன் டாலரை ஈட்டிய முதல் இந்திய நிறுவனமாக மாறியதை அடுத்து தற்போது ஆசியா மற்றும் இந்தியாவின் பெரும் பணக்காரர் இடத்தையும் பிடித்துள்ளார்.
பின்னுக்குத் தள்ளப்பட்ட கௌதம் அம்பானி!
அதானி குழுமம் பங்குகள் கையாளுதல்கள் மற்றும் கணக்கு மோசடிகள் செய்தததாக ஹிண்டன்பெர்க் வெளியிட்ட அறிக்கையை அடுத்து கௌதம் அதானி கட்டுப்பாட்டில் இருக்கும் அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. அதனையடுத்து அதானி குழுமத்தின் தலைவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 3 ஆவது இடத்திலிருந்து இறங்கி தற்போது 47.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 24 ஆவது இடத்தில் உள்ளார்.
ஹிண்டர்பெர்க் அறிக்கை எதிரொலி!
ஹிண்டர்பெர்க் அறிக்கை வெளியிடுவதற்கு முன்னர் ஜனவரி 24, 2023 இன் நிலவரப்படி 126 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஃபோர்ப்ஸ் வெளியிட்ட உலகின் மூன்றாவது பெரும் பணக்காரர் பட்டியலில் 3 ஆவது இடத்தில் இருந்தார்.
முன்னணி பணக்காரர்களை முந்திய முகேஷ் அம்பானி!
மைக்ரோசாப்டின் ஸ்டீவ் பால்மர், கூகுளின் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின், பேஸ்புக்கின் மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் டெல் டெக்னாலஜிஸின் மைக்கேல் டெல் பின்னுக்குத் தள்ளி அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 9 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
3 வது இடத்திற்கு தள்ளப்பட்ட அமேசான் தலைவர்!
ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் 180 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்திலிருந்து இப்போது 2 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் 3 வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
உலகின் நம்பர் 1 பணக்காரர் இவர்தான்!
பிரான்ஸின் ஆடம்பரப் பொருட்களின் அதிபரான பெர்னார்ட் அர்னால்ட் முதல் முறையாக 211 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் ஃபோர்ப்ஸ் பட்டியலில் உலகின் பெரும் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications