உலகளாவிய ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் நிறுவனமான Addverb, உத்தரபிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டா பகுதியில் 15 ஏக்கர் பரப்பளவில் பாட்-வெர்ஸ் எனப்படும் அதன் இரண்டாவது கிரீன்ஃபீல்ட் ரோபோ உற்பத்தித் தொழிற்சாலையை ஞாயிற்றுக்கிழமை திறந்துள்ளது.
இதற்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கும் என்ன தொடர்ப்பு..? Addverb நிறுவனத்தின் 55 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2021 ஜூலை மாதம் சுமார் 132 மில்லியன் டாலருக்கு கைப்பற்றினார். இதன் பின்பு Addverb நிறுவனம் அடுத்தடுத்து தொழிற்சாலைகளை திறந்து வருகிறது.

தற்போது நொய்டா-வில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் வந்து திறந்து வைத்துள்ள 15 ஏக்கர் பாட்-வெர்ஸ் ரோபோ உற்பத்தித் தொழிற்சாலையின் மூலம் சுமார் 3000 க்கும் மேற்பட்ட திறமையான வேலைவாய்ப்புகள் உருவாக்க முடியும் என்று Addverb நிறுவனம் கூறுகிறது.
உத்தரபிரதேசத்தில் ஆட்வெர்ப்-ன் சுமார் 200 கோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்பட்ட இந்த புதிய தொழிற்சாலை மூன்று ஆண்டுகளுக்குள் அமைக்கப்படும் 2வது தொழிற்சாலை என்பது குறிப்பிடத்தக்கது. Addverb சமீபத்தில் நொய்டாவில் ஒரு சாப்ட்வேர் டெவலப்மென்ட் சென்டரை திறந்து வைத்தது.
உத்தரபிரதேசத்தில் ஆட்வெர்ப் உருவாக்கியுள்ள இந்த தொழிற்சாலை மற்றும் சாப்ட்வேர் டெவலப்மென்ட் சென்டர் கட்டமைப்பு மூலம் உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு வேர்ஹசிங் ரோபாட்டிக்ஸ் மற்றும் material-handling solutions என பல சேவைகளை மேம்பட்ட வகையில் அளிக்க முடியும்.
Bot-Verse தொழிற்சாலை 600,000 சதுரடி பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கிறது. ஒரு வருடத்திற்கு 1,00,000 ரோபோக்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இத்தொழிற்சாலையில் சில பகுதிகளை ரோபோக்கள் ரோபோக்களை உருவாக்கும் அளவில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications