FIFA உலகக் கோப்பை வெற்றிகரமான சிறப்பான இறுதி ஆட்டத்துடன் முடிவடைந்த நிலையில், இந்தப் போட்டிகள் மூலம் இந்தியாவின் 2வது பெரிய பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானிக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.
முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் வயாகாம் 18 பல பொழுதுபோக்குச் சேனல்களை வைத்திருந்தாலும் சமீபத்தில் தான் இந்தியாவில் ஐபிஎல் மூலம் பூதாகரமாக வெடித்துள்ள ஸ்போர்ட்ஸ் என்டர்டெயின்மென்ட் வர்த்தகத்திற்குள் நுழைந்தது.
ஆரம்பமே அதிரடியாகக் களத்தில் இறங்க வேண்டும் என்பதற்காக வயாகாம் 18 பெரும் முதலீட்டு உடன் இறங்கியது மட்டும் அல்லாமல் ஐபிஎல் முதல் FIFA உலகக் கோப்பை வரையில் பல விளையாட்டு போட்டிகளின் ஒளிபரப்பு உரிமத்தை பெற்றது.
இலவசம்
புதிய சேனல், புதிய செயலி, புதிய கட்டமைப்பு என்பதால் வாடிக்கையாளர்களை ஈர்ப்பது மிகவும் கடினம். இந்த நிலையில் முகேஷ் அம்பானி தலைமையிலான நிர்வாகம் தனது ஆஸ்தான இலவசம் என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்து பெரும் வெற்றியைக் கண்டு உள்ளது.
Viacom18 Sports சேனல்
Viacom18 Sports சேனல் ஃபிஃபா உலகக் கோப்பை 2022 போட்டிகளை ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் என எவ்விதமான வித்தியாசம் இல்லாமல் அனைத்து டெலிகாம் வாடிக்கையாளர்களுக்கும் இலவசமாக வழங்க முடிவு செய்தது.
டிஜிட்டல் பார்வையாளர்கள் எண்ணிக்கை
இந்த உத்தி வயாகாம் 18-க்கு பெரிய அளவில் பலன் அளித்துள்ளது. ஏனெனில் ஃபிஃபா உலகக் கோப்பை 2022 கால்பந்து போட்டிகளின் போது இந்தியாவில் டிஜிட்டல் பார்வையாளர்கள் எண்ணிக்கை இந்தியாவில் முதல் முறையாக டிவி பார்வையாளர்களை எண்ணிக்கையை விஞ்சியுள்ளது.
ஜியோ சினிமா செயலி
டிசம்பர் 18 ஆம் தேதி அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் இடையேயான இறுதிப் போட்டியில் ஜியோ சினிமா செயலியில் மட்டும் சுமார் 1.1 பேர் ஒரே நேரத்தில் கண்டுள்ளனர். இதன் மூலம் ஜியோ மிகப்பெரிய வாடிக்கையாளர் கூட்டத்தை மிகவும் எளிதாகப் பெற்றுள்ளது.
இந்திய அணி
ஃபிஃபா உலகக் கோப்பை 2022 போட்டிகளில் இந்திய அணி இல்லாத போது ஜியோ சினிமா செயலியில் மட்டும் சுமார் 1.1 கோடி பேர் ஒரே நேரத்தில் கண்டுள்ளனர் என்பது மிகப்பெரிய எண்ணிக்கையாகும்.
OTT மற்றும் தொலைக்காட்சி சேனல்
அனைத்து OTT மற்றும் தொலைக்காட்சி சேனல்களின் செயலிகளில் தற்போது கட்டணங்களை வசூலிக்கத் துவங்கியுள்ள நிலையில், ஜியோ சினிமா செயலி இலவசமாக அளித்துள்ளது வாயிலாகவே இத்தளத்தில் வாடிக்கையாளர் விரும்பும் சேவைகள் இல்லாத போதும் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.
இலவசம் தான் உயிர் மூச்சு
ஜியோ செயலி மட்டும் அல்லாமல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது ஜியோ 4ஜி, ஜியோ 5ஜி ஆகியவற்றுக்கான சிம், வெல்கம் ஆஃபராக இலவசமாகக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து மலிவான போன், டெக்ஸ்டைல் மூலம் காய்கறி வரையில் அதிகப்படியான தள்ளுபடி மூலம் வாடிக்கையாளர்களையும், வர்த்தகத்தை ஈர்த்து வரும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கு இந்த இலவச சேவை ஒன்று புதியது இல்லை.
கிரிக்கெட், புட்பால்
கிரிக்கெட் என்றால் இந்த எண்ணிக்கை ஒப்புக்கொள்ள முடியும், இந்தியாவில் கிரிக்கெட்-ஐ தாண்டி வேறு விளையாட்டுக்கு மக்களும் சரி, விளம்பரதாரர்களும் சரி முக்கியத்துவம் அளிக்காதது வருத்தம் அளிக்கும் விஷயமாக இருக்கும் வேளையில் 1.1 கோடி பேரை ஒரு புதிய தளம் பெற்றுள்ளது வியப்புக்குரிய விஷயமாக உள்ளது.
பார்வை நேரம்
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ்18 டிவி சேனல் மற்றும் ஜியோ சினிமா இணைந்து சுமார் 40 பில்லியன் பார்வை நிமிடங்களை இந்த FIFA உலகக் கோப்பை போட்டியின் போது பெற்றுள்ளது.
300 கோடி ரூபாய்
இந்தப் போட்டியின் மூலம் Viacom18 Sports விளம்பர வருமானமாகச் சுமார் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஈட்டியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒருங்கிணைந்த டிவி+டிஜிட்டல் ஸ்பான்சர்ஷிப் டீல்கள் மூலம், விளம்பரதாரர்களாகப் பல வகைகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட பிராண்டுகளில் விளம்பரத்திற்காக இணைந்துள்ளது.
100 மில்லியன்
நவம்பர் 20 முதல் டிசம்பர் 18 வரை FIFA உலகக் கோப்பை போட்டிகளை ஸ்ட்ரீம் செய்த காலகட்டத்தில் சுமார் 110 மில்லியனுக்கும் அதிகமாகப் பயனர்கள் ஜியோ சினிமாவை பார்வையிட்டு உள்ளனர்.
ஃபிஃபா உலகக் கோப்பை
ஃபிஃபா உலகக் கோப்பை போட்டிகளின் பார்வை நேரம் ஒரு போட்டிக்கு 90 நிமிடங்கள் மட்டுமே என்பது விளம்பரங்களுக்குக் குறைவான வாய்ப்புகளை அளிக்கிறது என்பது வர்த்தக ரீதியில் பெறும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
ஐபிஎல்
ஃபிஃபா உலகக் கோப்பை போட்டிகள் முடிவடைந்த நிலையில், ஜியோ சினிமா செயலியில் அடுத்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளை முகேஷ் அம்பானி -யின் வயாகாம் 18 ஜியோ சினிமா தளத்தில் ஸ்ட்ரீம் செய்யத் தயாராகி வருகிறது.
இறுதிப் போட்டி
ஃபிஃபா உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு மட்டும் சுமார் 32 மில்லியன் பார்வையாளர்கள் ஜியோ சினிமா செயலியில் பார்த்துள்ளதாக Viacom18 Sports தெரிவித்துள்ளது.
இதோடு 110 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களுடன் ஃபிஃபா உலகக் கோப்பைக்கான அதிக டிஜிட்டல் பார்வையாளர் கொண்ட சந்தைகளில் இந்தியா முக்கியமான ஒன்றாக மாறியது என்றும் வயாகாம்18 தெரிவித்துள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications