ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியாவின் மெகா கோடீஸ்வரர் மற்றும் உலகின் டாப் 10 மெகா கோடீஸ்வரர்களில் ஒருவர். இவர் தனது குடும்பத்துடன் மும்பையில் உள்ள தனது அன்டிலியா வீட்டில் வசித்து வருகிறார். சுமார் ரூ.15,000 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த வீடுதான் உலகின் மிக விலையுயர்ந்த வீடாக கருதப்படுகிறது.
முகேஷ் அம்பானி குடும்பத்தினர் குறித்து ஏதாவது ஒரு செய்தி ஊடகங்களில் வந்து கொண்டே வந்து இருக்கும். அது அவர்களின் வர்த்தக அறிவிப்புகள், நன்கொடை, ஆடம்பரமான வாழ்க்கை போன்ற பல காரணங்களுக்காக அவர்கள் செய்திகளில் அடிக்கடி வருகின்றனர்.

அம்பானி குடும்பத்தினர் எங்கு சென்றாலும் சொகுசு கார்களின் பெரும் படையுடன் தான் செல்வார்கள். அவர்களின் கான்வாயில் பொதுவாக மெர்சிடிஸ்-ஏ.எம்.ஜி. ஜி63எஸ், ரேஞ்ச் ரோவர் எஸ்யூவிகள், ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் போன்றவை இருக்கும். ஆனால் தற்போது புதிதாக ஃபெராரி ரோமா கார் ஓன்றும் கான்வாயில் வருகிறது.
அம்பானி வாங்கியுள்ள இந்த ஃபெராரி ரோமா சூப்பர் கார் பிரபலமான ஃபெராரி சிகப்பு நிறத்தில் உள்ளது. இதன் விலை சுமார் ரூ.4.5 கோடியாகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான இந்த காரை முகேஷ் அம்பானி இப்போதுதான் வாங்கியுள்ளார்.
அவர் வீட்டு பார்க்கிங்கில் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ள ஃபெராரி 812 சூப்பர் பாஸ்ட், மெக்லாரன் 570எஸ், லம்போர்கினி அவென்டடோர் எஸ் ரோட்ஸ்டர், ஃபெராரி 488 ஜி.டி.பி., ஃபெராரி போர்டோபினோ, ஆஸ்டன் மார்ட்டின் டி.பி.11 மற்றும் இதர சூப்பர் கார்களுடன் புதிய வரவாக புதிய ஃபெராரி ரோமாவும் தற்போது நிற்கிறது.
இத்தாலியை சேர்ந்த சொகுசு ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமான ஃபெராரி, 2021ல் ஃபெராரி ரோமா மாடலை அறிமுகம் செய்தது. இந்த கார் அந்நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளை காட்டிலும் முற்றிலும் மாறுப்பட்டது.
இந்த காரில் 3.9 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜடு வி8 என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் 690 பி.எஸ். பவரையும், 760 என்.எம். டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 100 கி.மீட்டர் வேகத்தை 3.4 வினாடிகளில் எட்டி விடும் என தகவல்.
முகேஷ் அம்பானி அண்மையில் தனது மனைவி நீதா அம்பானிக்கு பரிசாக ரூ.10 கோடி மதிப்பிலான ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் எஸ்.வி.யூ.வை வாங்கினார். இந்த கார் இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த எஸ்.வி.யூ. ஆகும். நம் நாட்டில் இந்த மாடல் கார் ஒரு சில பிரபலங்கள் மட்டுமே வைத்திருக்கிறார்கள். அவர்களில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானும் ஒருவர்.


Click it and Unblock the Notifications