ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அமெரிக்க ஹெல்த்கேர் துறையில் முதலீடு செய்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் டிஜிட்டல் ஹெல்த் லிமிடெட், அமெரிக்காவின் ஹெல்த் அலையன்ஸ் குரூப் இன்க் நிறுவனத்தில் 45% பங்கு வாங்குவதற்கான இறுதி ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
முகேஷ் அம்பானி இந்த 45 சதவீத பங்குகளை மொத்தமாக 10 மில்லியன் டாலர்கள் மதிப்பில் வாங்க உள்ளார். ரிலையன்ஸ் பல துறையில் வேகமாக வளர்ச்சி அடைய தத்தம் துறையில் இருக்கும் நிறுவனங்களை கைப்பற்றி வர்த்தகத்தை வளர்த்து வருகிறது. இதன் வரிசையில் தற்போது ஹெல்த்கேர் துறையில் முதலீடு செய்துள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.

டெலாவேர் நிறுவனமான ஹெல்த் அலையன்ஸ் குரூப் இன்க், அமெரிக்கா, இந்தியா மற்றும் உலகின் பிற பகுதிகளில் போதுமான ஹெல்த்கேர் வசதிகள் இல்லாத மக்களுக்கு புதுமையான, தொழில்நுட்பம் சார்ந்த ஹெல்த்கேர் சேவைகளை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்றுள்ளது.
இந்த முதலீடு மூலம் உயர்தர ஹெல்த்கேர் சேவைகளை இந்தியாவில் அறிமுகம் செய்யும் வாய்ப்பை ரிலையன்ஸ் டிஜிட்டல் ஹெல்த் நிறுவனம் பெறும். மேலும் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஹெல்த் நோயறிதல் மற்றும் சிகிச்சை தளத்தை உருவாக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெல்த்கேர்த் துறையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு இந்த முதலீடு ஒரு முக்கியமான அடியாகும். ஹெல்த் அலையன்ஸ் குரூப்பின் நிபுணத்துவத்தையும் அதன் சொந்த தொழில்நுட்ப திறன்களையும் பயன்படுத்தி, உலகளவில் போதுமான ஹெல்த்கேர் வசதிகள் இல்லாத சமூகங்களுக்கான ஹெல்த்கேர் முடிவுகளை மேம்படுத்துவதில் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஹெல்த் இனி முக்கிய பங்கு வகிக்க உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் நேற்று வர்த்தகம் முடியும் போது ரூ.1,206.00 விலையில் முடிவடைந்தன, முந்தைய நாள் முடிவு விலையை விட 2.00% குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications