இந்தியாவில் கொரோனா தொற்றுக் காலத்தில் பல முன்னணி டெக்ஸ்டைல் நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகப் பாதிப்பை எதிர்கொண்ட நிலையில், சில நிறுவனங்களால் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் திவால் ஆனது. அப்படித் திவாலான நிறுவனம் தான் சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
பொதுவாக முகேஷ் அம்பானி திவாலான நிறுவனத்தைக் கைப்பற்றுவதில் விருப்பம் காட்டுவது இல்லை, ஆனால் சமீபத்தில் டெக்ஸ்டைல் மற்றும் பிற முக்கியமான துறையில் நிறுவனத்தை வேகமாக விரிவாக்கம் செய்து வரும் காரணத்தால் குறைந்த விலையில் கிடைக்கும் நிறுவனத்தைக் கைப்பற்றுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இதன் வாயிலாகத் திவாலான சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைக் கைப்பற்ற முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் விருப்பம் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
டெக்ஸ்டைல் துறை வர்த்தகத்தை அதிரடியாக விரிவாக்கம் செய்து வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திவாலான சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காகத் தனியாக ரிஸ்க் எடுக்காமல் ACRE நிறுவனத்துடன் சேர்ந்து விருப்ப விண்ணப்பம் கொடுத்துள்ளது.
16 நிறுவனங்கள் விருப்பம்
சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைக் கைப்பற்ற ரிலையன்ஸ் கூட்டணி மட்டும் அல்லாமல் ஆதித்யா பிர்லா-வின் வர்தே கேபிடல், வெல்ஸ்பன், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனமான கார்வால் முதலீட்டாளர்கள், Edelweiss, ப்ரூடென்ட் ஏஆர்சி, டிரைடென்ட் என மொத்தம் 16 நிறுவனங்கள் இந்நிறுவனத்தைக் கைப்பற்ற விருப்ப விண்ணப்பம் கொடுத்துள்ளது.
சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
அப்படி சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் என்ன ஸ்பெஷல். சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மிகவும் வேகமாக வளர்ந்து வந்த முக்கியமான டெக்ஸ்டைல் மற்றும் யார்ன் நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனத்திடம் அர்மானி, ஹூகோ பாஸ், டீசல், பர்பரி போன்ற முன்னணி பிராண்டுகளுடன் டீலிங் உள்ளது.
அலோக் இண்ட்ஸ்ட்ரீஸ்
திவாலான நிறுவனத்தைக் கைப்பற்ற விரும்பாத ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சமீபத்தில் அலோக் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தை ஜேஎம் பைனான்சியல் நிறுவனத்துடன் இணைந்து கைப்பற்றியது. தற்போது சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காகத் தனியாக ரிஸ்க் எடுக்காமல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ACRE நிறுவனத்துடன் சேர்ந்து விருப்ப விண்ணப்பம் கொடுத்துள்ளது.
சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
குஜராத்-ல் தலைமையாகக் கொண்டு வர்த்தகம் செய்யும் சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது முக்கிய முதலீட்டாளரான இன்வெஸ்கோ சொத்து மேலாண்மை நிறுவனத்திற்கு அளிக்க வேண்டிய 15.4 கோடி ரூபாய் பேமெண்ட்-ஐ செலுத்தாத காரணத்தால் அகமதாபாத் NCLT நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
7,534.6 கோடி ரூபாய்க் கடன்
இந்நிலையில் சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சுமார் 27 நிதி நிறுவனங்களுக்குக் கொடுக்க வேண்டிய 7,534.6 கோடி ரூபாய் அளவிலான கடனை கருத்தில் கொண்டு ஏப்ரல் 2021ல் இந்நிறுவனத்தைத் திவாலாக அறிவிக்கப்பட்டு, தீர்வுக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வெல்ஸ்பன் நிறுவனம்
இதைத்தொடர்ந்து வெல்ஸ்பன் நிறுவனம் சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை மொத்தமாக 1,950 கோடி ரூபாய் தொகைக்குக் கைப்பற்றுவதாக அறிவித்த நிலையில், இந்நிறுவனத்திற்குக் கடன் கொடுத்த 27 நிதி நிறுவனங்களும் மறுப்புத் தெரிவித்தது.
விருப்ப விண்ணப்பங்கள்
இந்நிலையில் தற்போது சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைக் கைப்பற்ற விருப்ப விண்ணப்பத்தைப் பெற துவங்கியுள்ளது 27 நிதி நிறுவனங்கள் தலைமையிலான குழு. சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ஐ ரிலையன்ஸ் கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளது.
சின்டெக்ஸ் டேங்க்
சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இந்தியாவில் மிகவும் பிரபலமான வாட்டர் டாங்க் தயாரிக்கும் பிராண்டு தான். ஆனால் 2017ல் வாட்டர் டாங்க் தயாரிக்கும் வர்த்தகம் மற்றும் அனைத்து சொத்துக்களையும் சின்டெக்ஸ் பிளாஸ்டிக் டெக்னாலஜி லிமிடெட் நிறுவனத்திற்குத் தனியாகப் பிரிக்கப்பட்டது. இதன் மூலம் சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் தற்போது டெக்ஸ்டைல்ஸ் மற்றும் யார்ன் (நூல்) தயாரிப்பு வர்த்தகம் மட்டுமே உள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications