மும்பை: இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி விலை உயர்ந்த தனியார் ஜெட் ஒன்றை வாங்கி இருக்கிறார். முகேஷ் அம்பானி மற்றும் குடும்பத்தினர் தங்களுக்கு என தனி விமானங்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் முகேஷ் அம்பானி புதிதாக ஒரு விமானத்தை வாங்கியுள்ளார்.
1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த தனியார் ஜெட்டை முகேஷ் அம்பானி வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது போயிங் நிறுவனத்தின் பிபிஜே 737 மேக்ஸ் 9 மாடல் (Boeing 737 MAX 9) ஆகும். இந்த விமானம் முகேஷ் அம்பானியின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ற வகையில் பிரத்தியேகமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதியிலிருந்து கடந்த மாதம் ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை இந்த விமானத்தை பரிசோதிக்கும் பணிகள் நடைபெற்றன. அவர் எதிர்பார்த்த அனைத்து வசதிகளும் இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஆகஸ்ட் 28ஆம் தேதி விமானம் டெலிவரி செய்யப்பட்டது.
இந்த விமானம் இரண்டு என்ஜின்களை கொண்டதாக இருக்கிறது, பல்வேறு ஆடம்பர வசதிகள் நிறைந்ததாக இந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது .இதற்காகவே பல ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்துள்ளனர். மாளிகை போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டதாக இந்த விமானம் இருக்கிறதாம். கேபினை பொருத்தவரை மேக்ஸ் 8 விமானத்தில் இருக்கும் கேபின்களை விட மிகப்பெரியது என சொல்லப்படுகிறது.
ஒரு முறை விமானத்தை எடுத்தால் 11,770 கிலோ மீட்டர் தூரம் வரை பறக்கும் திறன் கொண்டது இந்த விமானம். போயிங் நிறுவனம் முதன்முறையாக இந்த விமானத்தை இந்தியாவில் இருக்கும் ஒரு நபருக்கு டெலிவரி செய்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி இந்த விமானம் டெல்லி விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிகிறது.
இது பின்னர் இந்திய விமான போக்குவரத்து ஆணையத்திடம் பிடிஏவிகே என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் விரல் விட்டு எண்ணக்கூடிய நபர்கள் மட்டுமே இந்த விமானத்தை பயன்படுத்துகிறார்கள். அவர்களில் முகேஷ் அம்பானியும் இணைந்துள்ளார்.
கிட்டத்தட்ட ஒரு மாளிகையில் இருந்து கொண்டு பறப்பதைப் போன்ற அனுபவத்தை இது தரும் என சொல்லப்படுகிறது. பெரிய அளவிலான மாஸ்டர் பெட்ரூம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இதில் இருக்கிறதாம். இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு முன்பாக இந்த விமானம் ஜெனிவா, லண்டன் உள்ளிட்ட நகரங்களில் பறக்க விட்டு சோதனை செய்யப்பட்டது. 220 பயணிகளை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த விமானத்தில் இனி முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் மட்டுமே பறக்க இருக்கின்றனர்.
தற்போது இந்தியாவிலேயே விலை உயர்ந்த பிரைவேட் ஜெட்டுக்கு உரிமையாளர் என்ற பெருமை முகேஷ் அம்பானிக்கு கிடைத்துள்ளது. தற்போது இந்த விமானம் டெல்லி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது கூடிய விரைவில் மும்பை விமான நிலையத்தில் நிறுத்தி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
முகேஷ் அம்பானியை பொருத்தவரை ஏற்கனவே 9 பிரைவேட் ஜெட்களுக்கு சொந்தக்காரராக இருக்கிறார் , இரண்டு ஹெலிகாப்டர்களையும் இவர் கொண்டிருக்கிறார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications