இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் எரிசக்தி மற்றும் இன்பரா மிகவும் முக்கியமான பங்கீட்டை வகிக்கும் வேளையில் இத்துறையில் பெரும் ஆதிக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும் எனத் திட்டத்தில் நாட்டின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியங்கள் களத்தில் இறங்கியுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவின் அதிக மதிப்புடைய நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சர்க்கரை ஆலை உரிமையாளர்களிடம் அடுத்தடுத்து பேசி வருகிறது. எதற்காக தெரியுமா..?

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் இருந்து பல எரிபொருள், எரிவாயு உற்பத்தி வரையில் கவனம் செலுத்தி வரும் முகேஷ் அம்பானி தற்போது கம்பிரஸ்ட் பியோகேஸ் உற்பத்தி பணிகளைச் செய்ய உள்ளது. இந்த நிலையில் பியோகேஸ் உற்பத்திக்கான மூலப்பொருளான கரும்பு வடிகட்டி அழுத்தி சேறு எனப்படும் sugarcane press mud வழங்குவதற்குப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதானி குழுமம் மட்டும் அல்லாமல் பல வர்த்தக அமைப்புகள் விவசாய மற்றும் உணவு கழிவுகளில் இருந்து CBG எனப்படும் கம்பிரஸ்ட் பியோ கேஸ்-ஐ உற்பத்தி செய்யும் பணிகளைச் செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் கம்பிரஸ்ட் பியோகேஸ் உற்பத்தி ஆலைகளுக்காக, சர்க்கரை ஆலைகளில் இருந்து நேரடியாகப் பல ஆயிரம் டன் அளவிலான பெரும் தொகுதியில் கரும்பு வடிகட்டி அழுத்தி சேறு-ஐ தொடர்ந்து பெறுவதற்குப் பேசுவார்த்தை நடத்தி வருகிறது.
இதற்காக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா முழுவதும் இருக்கும் பெரிய சர்க்கரை ஆலைகளை அணுகியுள்ளது. இதன் மூலம் கரும்பு வடிகட்டி அழுத்தி சேறு சப்ளை தினசரி அடிப்படையில் உறுதி செய்ய முயன்று வருகிறது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
செப்டம்பர் மாதம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி அடுத்த ஐந்து ஆண்டுகளில் 100 CBG ஆலைகளை அமைக்கும் திட்டத்தை அறிவித்தார். இந்த ஆலைகள் 5.5 மில்லியன் டன்கள் விவசாயக் கழிவுகள் மற்றும் கரிம கழிவுகளைப் பெற்று பயோ கேஸ் தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் Barabanki என்ற இடத்தில் பயோகேஸ் தொழிற்சாலை இயக்கி வருகிறது.
ரிலையன்ஸ் குழுமம் 100 CBG ஆலைகளை அமைக்கும் திட்டத்தில், ஒரு நாளுக்குச் சராசரியாக 10 மில்லியன் டன் பயோகேஸ் உற்பத்தித் திறன் கொண்டதாக இருக்கும். இதற்காக ஒவ்வொரு நாளும் சுமார் 250,000 டன் கரும்பு வடிகட்டி அழுத்தி சேறு தேவை. ஒரு டன் கரும்பு வடிகட்டி அழுத்தி சேறு-ன் விலை 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையில் இருக்கும்.


Click it and Unblock the Notifications