அம்பானி குடும்பத்தின் நவராத்திரி கொண்டாட்டம்!! தாண்டியா நடனமாடிய முகேஷ்-நீதா தம்பதி!!

மும்பை: நாடு முழுவதும் நவராத்திரி கொண்டாட்டங்கள் உற்சாகமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஒன்பது நாட்களும் கொலு பொம்மை வைப்பதில் தொடங்கி கர்பா நடனம், தாண்டியா நடனம், துர்கா பூஜை என பல்வேறு சிறப்பான கொண்டாட்டங்கள் நடைபெறும் .

இந்தியர்கள் உற்சாகமாக இந்த ஒன்பது நாட்கள் நவராத்திரி திருவிழாவை கொண்டாடி மகிழ்ந்து அந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட வண்ணம் இருக்கின்றனர். இந்தியாவின் பணக்கார குடும்பமான முகேஷ் அம்பானியின் குடும்பமும் இதில் விதிவிலக்கு அல்ல.

அம்பானி குடும்பத்தின் நவராத்திரி கொண்டாட்டம்!! தாண்டியா நடனமாடிய முகேஷ்-நீதா தம்பதி!!

அம்பானி குடும்பத்தினர் எப்பொழுதுமே தங்களின் கலாச்சாரத்தையும் பண்டிகைகளையும் பெருமையுடன் கொண்டாடுவது வழக்கம். குறிப்பாக குடும்பமாக அனைவரும் ஓரிடத்தில் இணைந்து கொண்டாடுவார்கள். அண்மையில் கூட விநாயகர் சதுர்த்தியை பிரம்மாண்டமாக கொண்டாடினர். தற்போது நவராத்திரி பண்டிகையையும் அம்பானி குடும்பத்தினர் உற்சாகமாக கொண்டாடியுள்ளனர்.

மும்பையில் உள்ள அண்டிலியா குடியிருப்பில் அம்பானி குடும்பத்தினர் நவராத்திரி பூஜை செய்தனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீதா அம்பானி தம்பதி சமிதமாக துர்கைக்கு பூஜை செய்து வழிபட்டனர்.

இந்த சிறப்பு பூஜையில் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி அவரது மனைவி ஸ்லோகா மேத்தா , இளைய மகன் ஆனந்த் அம்பானி அவரது மனைவி ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரும் கலந்து கொண்டனர். அம்பானியின் மகள் ஈஷா அம்பானி தன்னுடைய இரட்டையர்களோடு இந்த விழாவில் கலந்து கொண்டார்.

குடும்பமாக அனைவரும் சாமிக்கு பூஜை செய்து வழிபட்டு பின்னர் உற்சாகமாக தாண்டியா நடனமும் ஆடி இருக்கின்றனர். இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் வைரலாக இருக்கிறது . முகேஷ் அம்பானி நீதா அம்பானி ஆகிய இருவரும் தாண்டியா நடனம் ஆடுவதும் அந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கிறது. கர்பா, தாண்டியா மற்றும் பாரம்பரிய நடனங்கள் , கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு வண்ணமயமான நிகழ்ச்சிகளை அம்பானி குடும்பம் அரங்கேற்றி இருக்கிறது.

இந்த நிகழ்வுகளுக்கு எல்லாம் நீதா அம்பானி தான் தலைமை வகித்தார். முகேஷ் அம்பானி இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருக்கிறார். அவருக்கு சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தான் இந்தியாவில் அதிக சந்தை மூலதன மதிப்பு கொண்ட நிறுவனமாக இருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+