இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமம் ரிலையன்ஸ் தொழில் குழுமம். ரிலையன்ஸ் குழுமத்திற்கு உட்பட்ட நிறுவனங்கள் இதுவரை கால் பதிக்காத துறையே இல்லை என கூறும் அளவுக்கு பெட்ரோ கெமிக்கல், தொலைதொடர்பு சேவை, ஃபேஷன், சில்லறை விற்பனை என அனைத்து துறைகளிலுமே ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வெற்றி மட்டுமே கிடைத்திருக்கிறது.
அந்த வகையில் அடுத்த சில ஆண்டுகளுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த டேட்டா மையங்கள் ஆகிய பிரிவுகளில் பெரிய அளவில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறது. டெல்லியில் நடைபெற்ற ஏஐ மாநாட்டில் கலந்து கொண்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி இதனை உறுதிப்படுத்தி இருக்கிறார். ஏஐ என்பது மற்றும் ஒரு தொழில்நுட்பம் கிடையாது என தெரிவித்திருக்கும் அவர் மகாபாரதத்தில் எப்படி அட்சய பாத்திரமோ அதே போல இன்றைய நவீன உலகில் ஏஐ ஒரு அட்சய பாத்திரம் என தெரிவித்திருக்கிறார்.

முதல் முறையாக மனிதர்கள், மனிதர்கள் மாதிரியான ஒரு அமைப்பையே உருவாக்குகிறார்கள். இந்த அமைப்பு கற்றுக் கொள்ளும் ,பேசும் ,பகுப்பாய்வு செய்யும், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும், தானியங்கு முறையில் இவை அனைத்துமே நடக்கும் என தெரிவித்திருக்கிறார். ஏஐ என்பது அனைத்து எந்திரங்களுக்கும் சக்தி கொடுக்கும் ஒரு மந்திரம் என குறிப்பிட்டார்.
அட்சய பாத்திரம் எப்படி மகாபாரதத்தில் அள்ள அள்ள குறையாத உணவினை வழங்கியதோ அது போல ஏஐ நமக்கு அறிவு, திறன் மற்றும் உற்பத்தி திறன்களை வழங்கப் போகிறது என சுட்டிக்காட்டினார். அடுத்த ஏழு ஆண்டுகளில் ஏஐ தொழில் நுட்பத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 10 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்யப்போகிறது என தெரிவித்த அவர் இந்தியர்களுக்கு மலிவு விலையில் எப்படி டேட்டாவை கொண்டு சேர்த்து ஜியோ பெரிய புரட்சியை செய்தது அதேபோல ஏஐ தொழில்நுட்பத்தையும் ஒவ்வொரு இந்தியர்களிடமும் கொண்டு சேர்க்கக்கூடிய பொறுப்பினை ஜியோ கையில் எடுக்கப் போகிறது என சுட்டிக்காட்டினார்.
ஜியோ நிறுவனம் ஏற்கனவே ஏஐ சம்பந்தப்பட்ட செயலிகளை உருவாக்கி வருவதாக குறிப்பிட்டு இருக்கும் அவர் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறந்த எதிர்காலத்தை உருவாக்க அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும் என சுட்டிக்காட்டினார். இந்தியாவின் ஏஐ பரிமாற்றத்தில் ஜியோவின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும் என முகேஷ் அம்பானி தெரிவித்து இருக்கிறார். ஜாம்நகரில் தங்களுடைய நிறுவனம் மிகப்பெரிய டேட்டா மையத்தை கட்டி வருவதை கட்டி வருவதை சுட்டிக்காட்டி அவர் அடுத்த கட்டமாக தங்களுடைய நிறுவனம் பெரிய அளவில் டேட்டா மையங்களுக்கான கட்டமைப்புகளிலும் கவனம் செலுத்தப் போகிறது என கூறினார்.


Click it and Unblock the Notifications