அதானி குழுமத்தின் வீழ்ச்சி இந்தியாவின் அனைத்து முன்னணி வர்த்தக சாம்ராஜ்ஜியத்திற்கும் பாடமாக அமைந்த நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது வர்த்தகத்தை வலிமைப்படுத்தும் வகையில் அடுத்தடுத்து முக்கியமான முதலீடுகளையும், முடிவுகளைும் எடுத்து வருகிறது.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது ரீடைல், டெலிகாம், நியூ எனர்ஜி ஆகிய பிரிவில் அதிகப்படியான முதலீடும், கவனத்தையும் செலுத்தி வந்தாலும், தனது ஆஸ்தான பெட்ரோல்கெமிக்கல் வர்த்க்கத்தை வலிமைப்படுத்துவதில் உறுதியாக உள்ளது.
இந்த நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் கிளை நிறுவனமான ரிலையன்ஸ் பாலியஸ்டர் லிமிடெட் நிறுவனம் சுப்பலக்ஷ்மி பாலியஸ்டர்ஸ் லிமிடெட் மற்றும் சுப்லக்ஷ்மி பாலிடெக்ஸ் லிமிடெட் ஆகிய இரு நிறுவனங்களை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் அஸ்திவாரமான பெட்ரோகெமிக்கல் வர்த்தகத்தை மேம்படுத்த உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுப்பலக்ஷ்மி பாலியஸ்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்தை 1,522 கோடி ரூபாய்க்கும், சுப்லக்ஷ்மி பாலிடெக்ஸ் நிறுவனத்தை 70 கோடி ரூபாய்க்கும் வாங்குவதாக ஒப்பந்தம் செய்தது.
சுப்பலக்ஷ்மி
இந்த கைப்பற்றல் திட்டத்திற்கு அக்டோபர் மாதம் சிசிஐ ஒப்புதல் அளித்த நிலையில் தற்போது ரிலையன்ஸ் மொத்தமாக பணத்தை கொடுத்து கைப்பற்றியுள்ளது. இந்த கைப்பற்றல் குறித்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குச்சந்தையில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
குஜராத்
தஹேஜ் (குஜராத்) மற்றும் சில்வாசா (தாத்ரா மற்றும் நகர் ஹவேலி) ஆகிய இடங்களில் சுப்பலக்ஷ்மி பாலியஸ்டர்ஸ் இரண்டு உற்பத்தி ஆலைகளை கொண்டுள்ளது மற்றும் சுப்பலக்ஷ்மி பாலிடெக்ஸ் தஹேஜில் ஒரு கடினமான நூல் உற்பத்திப் பிரிவைக் கொண்டுள்ளது.
பாலியஸ்டர்
பாலியஸ்டர் தயாரிப்புகளின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் இவ்விரு நிறுவனங்கள் நிபுணத்துவம் பெற்றவை. ரிலையன்ஸின் பாலியஸ்டர் வணிகத்தை விரிவுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இவ்விரு நிறுவனங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.
அலோக் இண்டஸ்ட்ரீஸ்
டெக்ஸ்டைல் துறையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களை கைப்பற்றுவது முதல் முறையல்ல, 2019 ஆம் ஆண்டில், திவாலான அலோக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை 5,000 கோடி ரூபாய்க்கு வாங்கியது. அலோக் இண்டஸ்ட்ரீஸ், சில்வாசா, வாபி, நவி மும்பை மற்றும் பிவாண்டி ஆகிய இடங்களில் தொழிற்சாலைகளை வைத்துள்ளது. இந்நிறுவனம் ஆண்டுக்கு 68,000 டன் பருத்தி நூல் மற்றும் 1.7 லட்சம் டன் பாலியஸ்டர் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இதேபோல் ஏப்ரல் 2022 இல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திவாலான சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ஐ ரூ.3,651 கோடிக்கு வாங்கியது. இந்நிறுவனம் Hugo Boss, Armani, Burberry மற்றும் Diesel போன்ற உலகளாவிய பிராண்டுகளுக்கு சின்டெக்ஸ் முக்கிய சப்ளையர் ஆக உள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications