டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா மறைவு இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தொழில்துறைத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ரத்தன் டாடா மறைவுக்கு நாட்டின் அனைத்து தலைவர்களும், தொழிலதிபர்களும் இரங்கல் தெரிவித்து வரும் வேளையில், நேற்று இரவே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் முகேஷ் அம்பானி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் இரங்கல் தெரவித்தார். அம்பானி டாடாவின் மறைவு இந்தியா மற்றும் டாடா குழுமத்திற்கு பெரும் இழப்பு என்று குறிப்பிட்டார். இதோடு தான் ஒரு அன்பான நண்பரை இழந்ததால் தனக்கு தனிப்பட்ட அளவில் துக்கம் ஏற்பட்டதாகவும் தனது பதிவின் மூலம் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் தற்போது முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி மற்றும் அவரது கணவர் ஆனந்த் பிராமல், ரத்தன் டாடாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த மும்பையின் National Centre of Performing Arts சென்டருக்கு வந்துள்ளனர். நூற்றுக்கணக்கான மக்கள் NCPA கூடியிருந்த நிலையில் ரத்தன் டாடா-வின் முகத்தை கடைசியாகப் பார்க்கவும் அஞ்சலி செலுத்தவும் ஈஷா அம்பானி வந்துள்ளார்.
மும்பையில் ஈஷா அம்பானி மட்டும் அல்லாமல் ராஜ் தக்கரே, ஷரத் பவார், சுப்ரியா சுலே மற்றும் ரத்தன் டாடாவின் சகோதரர் ஜிம்மி நவல் டாடா ஆகியோரும் NCPA சென்டரில் ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
ரத்தன் டாடாவின் இறுதி சடங்கு மும்பையின் வோர்லி சுடுகாட்டில் நடைபெறும். டாடா டிரஸ்ட் அறிக்கையின்படி, ரத்தன் டாடாவின் உடல் இன்று மாலை 4 மணிக்கு இறுதி பயணத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.


Click it and Unblock the Notifications