முகேஷ் அம்பானி- நீதா அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி, இந்த வருடம் ஜூலை மாதத்தில் தனது காதலி ராதிகா மெர்ச்சன்ட்-ஐ திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்துள்ளார். இந்த ஜோடி மார்ச் மாதத்தில் தங்கள் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களை உலகமே வியக்கும் வண்ணம் நடத்தியது.
தற்போது ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் இருவரும் திருமணத்திற்கு தயாராகி வருகின்றனர். திருமண இடம் கிட்டத்தட்ட உறுதி ஆனாலும் விருந்தினர் பட்டியல் மற்றும் வடிவமைப்பாளர் உடைகள் பற்றிய தகவல்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமண விழாக்களில் ஒன்று ஜூலை மாதம் லண்டனில் உள்ள அவர்களது ஸ்டோக் பார்க் எஸ்டேட்டில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அம்பானி குடும்பத்தினர் தங்கள் ஆடம்பர விருந்துக்கும், கவனிப்புக்கும் பெயர் பெற்றவர்கள். ஸ்டோக் பார்க் எஸ்டேட்டில் அவர்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்வை காண உலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது. அது சரி ஸ்டோக் பார்க் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

கொரோனா லாக்டவுன் காலத்தில் பல இந்திய பில்லியனர்கள் தங்களது வீட்டைப் பிரிட்டன் நாட்டிற்கு மாற்றினர். இன்னும் சிலர் இந்தியாவில் கொரோனா வேகமாகப் பரவி வந்த போது குடும்பமாகப் பிரிட்டன் நாட்டிற்குக் குடியேறினர். இந்த நிலையில் முகேஷ் அம்பானியும் தனது குடும்பத்துடன் பிரிட்டன் நாட்டில் குடியேறினர், இந்த நேரத்தில் தான் லண்டனில் ஒரு வீடு வாங்க ஆசைப்பட்ட அம்பானி லண்டனுக்கு அருகிலேயே மிகப்பெரிய வீட்டை வாங்கினார்.
முகேஷ் அம்பானி 900 ஆண்டுப் பழமையான மற்றும் பாரம்பரியம் நிறைந்த லண்டன் ஸ்டோக் பார்க் ஹோட்டலை சுமார் 592 கோடி ரூபாய்க்கு வாங்கினார். இது ஒரு கண்டரி கிளப் ஹோட்டலாகும், சுமார் 14 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள இந்த ஸ்டோக் பார்க் அரண்மனை, 49 பெட்ரூம், 23 ஓட்டைகள் கொண்ட கால்ஃப் கோர்ஸ், 13 டென்னிஸ் கோர்ட், 14 ஏக்கரில் பிரைவேட் கார்டன் ஆகியவை உள்ளது. Stoke Park estate மொத்த பரப்பளவு 270 ஏக்கர்.

பக்கிங்ஹாம்ஷயரில் அமைந்துள்ள 592 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட இந்த ஸ்டோக் பார்க் கன்ட்ரி கிளப், பிரிட்டனின் மிகவும் ஆடம்பரமான சொத்துகளில் ஒன்றாகும். இந்த 900 ஆண்டுகள் பழமையான இந்த கட்டிடத்தில் இதுவரை இரண்டு ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் 'கோல்ட்ஃபிங்கர்' (1964) மற்றும் 'டொமாரோ நெவர் டைய்ஸ்' (1997) இடம்பெற்றுள்ளது.
1066 ஆம் ஆண்டில் முதலில் கட்டப்பட்ட இந்த ஸ்டோக் பார்க் எஸ்டேட், பின்னர் 1760 ஆம் ஆண்டில் ஜான் பென்னால் புதுப்பிக்கப்பட்டது. அம்பானி வாங்குவதற்கு முன்பு இது ஒரு ஹோட்டலாக இருந்தது. முகேஷ் அம்பானி Stoke Park estate-ஐ வாங்கிய பின்பு இங்க மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாற்றங்கள் குறித்த தகவல் வெளியான போது முகேஷ் அம்பானி லண்டனுக்கே குடிபெயர்கிறாரா என்ற கேள்வி கூட எழுந்தது.

பிரிட்டனில் உள்ள ஸ்டோக் பார்க் கன்ட்ரி கிளப் பல ஆண்டுகளாக பல பிரபலமான விருந்தினர்களை ஈர்த்துள்ளது. முக்கிய கொண்டாட்டங்கள் மற்றும் நிகழ்வுகளின் போது, பிரிட்டன் அரச குடும்பத்தினர் இங்கு தங்கியுள்ளனர். 1581 ஆம் ஆண்டில் முதலாம் ராணி எலிசபெத் இந்த இடத்தில் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பாரம்பரியமிக்க இடத்தில் தான் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடைபெற உள்ளது. இது அம்பானி குடும்பத்தினர் மட்டும் பங்குப்பெறும் நெருக்கமான நிகழ்வாக இருக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

மேலும் குஜராத் நிகழ்ச்சி மூலம் ஜாம்நகரில் அம்பானி குடும்பம் உருவாக்கிய காடு மற்றும் விலங்குகள் காப்பகத்தை உலகிற்கு காட்டும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதேபோல் ஸ்டோக் பார்க்-ஐ 2021ல் வாங்கிய பின்னர் அது எப்படியெல்லாம் ரெனவேட் செய்யப்பட்டு உள்ளது என்பதை காட்டும் வகையில் லண்டனில் திருமண நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்



Click it and Unblock the Notifications