பெட்ரோலியம், டெலிகம்யூனிகேஷன்ஸ், ரீடெய்ல் போன்ற துறைகளில் கோலோச்சும் முகேஷ் அம்பானி விவசாயத்திலும் மிகப்பெரிய உச்சத்தை எட்டியுள்ளார் என்பது எத்தனை பேருக்கு தெரியும். அவரது தலைமையின் கீழ் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் உலகின் மிகப் பெரிய மாம்பழ ஏற்றுமதி நிறுவனமாக உயர்ந்துள்ளது. தொழில்துறையில் இருந்து ரிலையன்ஸ் நிறுவனம் விவசாயத்திலும் சாதனை புரிந்துள்ளது.
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் கடுமையான மாசுபாடு பிரச்னைகள் எழுந்தபோது புதிய சிந்தனையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இறங்கியது. சுற்றுச்சூழல் பாதிப்பை தவிர்ப்பதற்கு மாசு கட்டுப்பாடு வாரியம் விதித்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்காக ரிலையன்ஸ் நிறுவனம் புதிய திட்டத்தில் இறங்கியது.

ஜாம்நகர் ஆலையை சுற்றியுள்ள வறண்ட நிலத்தை ஒரு பெரிய மாந்தோப்பாக மாற்றும் வேலையில் இறங்கியது. இந்தத் திட்டத்தின் மூலம் மாசுபாட்டை தடுப்பதோடு ஆலை அடங்கியுள்ள பகுதியை பசுமைப் போர்வையாக மாற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தீர்மானித்தது.
ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானி பெயரில் 600 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்த தோப்பில் 1.3 லட்சம் மாஞ்செடிகள் நடப்பட்டு வளர்க்கப்பட்டன. 200 வகையான மாம்பழச் செடிகள் இதில் நடப்பட்டுள்ளன. 16 ஆவது நூற்றாண்டில் முகலாய மன்னர் அக்பர் அமைத்த லக்கிபாக் சோலையை நினைவூட்டும் வகையில் இந்த மாந்தோப்பு நிறுவப்பட்டது.
ஜாம்நகர் பகுதியில் நிலத்தில் இருந்த உப்பு மற்றும் காரத்தன்மையை தாக்குப்பிடிக்கும் அளவுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் சிறந்த தொழில்நுட்பங்களை செயல்படுத்தியது. இதற்காக தண்ணீர் சுத்திகரிக்கும் ஆலையை அங்கு அமைத்தது. தண்ணீர் சேகரிப்பு, சொட்டுநீர் பாசனம், சிறந்த உரங்கள் மூலம் மாந்தோப்பு பராமரிக்கப்பட்டது. இங்கு கேசார், அல்போன்சா, ரத்னா, சிந்து, நீலம், அமராபல்லி போன்ற ரகங்கள் விளைவிக்கப்பட்டன.
சர்வதேச விளைவிப்பாளர்களான டாமி அட்கின்ஸ், கென்ட், லில்லி, கீய்த், மாயா ஆகியோர் இதில் பங்கேற்றன. வருடத்துக்கு 600 டன் பிரீமியம் மாம்பழங்கள் விளைந்தன. இதன் மூலம் உள்ளூரிலும் வெளிநாட்டிலும் மிகப் பெரிய மாம்பழம் ஏற்றுமதி நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் உருவானது.
தனது சொந்த செயல்பாடுகளுடன் ரிலையன்ஸ் சமூக மேம்பாட்டுக்காகவும் வேலை செய்தது. வருடந்தோறும் ஒரு லட்சம் மாஞ்செடிகளை உள்ளூர் விவசாயிகளுக்கு வழங்கியதோடு, புதுமையான விவசாய தொழில்நுட்பம் குறித்த பயிற்சியையும் வழங்கியது.
தேவையான அனைத்து உதவிகளையும் விவசாயிகளுக்கு வழங்கியது. மாம்பழ சாகுபடியில் முகேஷ் அம்பானியின் இந்த முயற்சி, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதே வேளையில், தொழில்துறை ஜாம்பவான்கள் சுற்றுச்சூழல் சவால்களைச் சமாளிக்க தங்கள் வளங்களை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
திருபாய் அம்பானி லக்கிபாக் அம்ராயி, ரிலையன்ஸின் புதுமையான உணர்வை உருவகப்படுத்துவது மட்டுமல்லாமல், விவசாய ஏற்றுமதியில் நிலைத்தன்மை மற்றும் உலகளாவிய தலைமைத்துவத்துக்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் பறைசாற்றுகிறது.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications