இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மிகவும் முக்கியமான முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவால் முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் கடைக்குட்டி சிங்கமான அனந்த் அம்பானி மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பது மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கும் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாம்ராஜ்ஜியத்தில் நெக்ஸ்ட் பிக் திங்க் என்றால் அது கட்டாயம் ரிலையன்ஸ் நியூ எனர்ஜி வர்த்தகம் தான், பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகி வரும் ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சாம்ராஜ்ஜியத்தை முகேஷ் அம்பானியும், அவரது இளைய மகனுமான அனந்த் அம்பானி இணைந்து கட்டமைத்து வரும் வேளையில் இந்நிறுவனத்தின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

டாடா குழுமம், அதானி குழுமம், பிர்லா குழுமம் போல் அல்லாமல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அனைத்து வர்த்தகத்தையும் ஒரு நிறுவனத்தின் கீழ் வைத்திருக்கும் காரணத்தால் அதன் உண்மையான மதிப்பீடு, முழுமையான பலன்கள் முதலீட்டாளர்களுக்கு கிடைக்காமல் உள்ளது என கூறப்பட்டு வரும் வேளையில் சமீபத்தில் ஜியோ பைனான்சியல் வர்த்தகத்தை தனியாக பிரித்து ஐபிஓ வெளியிட தயாராகியுள்ளது முகேஷ் அம்பானி நிர்வாகம்.
இந்த திட்டத்தின் தொடர்ச்சியாக ஒரு வருடமாக திட்டமிட்டப்பட்டு வந்த ரிலையன்ஸ் நியூ எனர்ஜி நிறுவனத்தை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் உடன் இணைக்கும் திட்டத்தை கைவிடப்பட்டு உள்ளதாக பங்குச்சந்தைக்கு ரிலையன்ஸ் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் உயர்மட்ட நிர்வாகம் முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ரிலையன்ஸ் நியூ எனர்ஜி வர்த்தகம் மற்றும் அதன் முதலீட்டு வடிவத்தை ஆய்வு செய்யும் போது இப்பிரிவு வர்த்தகத்தை Reliance New Energy Limited பெயரில் தனியாகவே நடத்தவும், இணைப்பு திட்டத்தை கையிவிட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதை விளக்கி பங்குச்சந்தைக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு மத்தியில் முகேஷ் அம்பானி நிறுவனத்தின் நிர்வாக கூட்டத்தில் அடுத்த 3 வருடத்தில் 75000 கோடி ரூபாய் முதலீட்டை New Energy வர்த்தகத்தில் செய்ய திட்டமிட்டு உள்ளதாக அறிவித்தார். இதில் 60000 கோடி ரூபாய் முதலீட்டை 4 ஜிகா பேக்டரியை அமைப்பதற்காக செலவிடப்பட உள்ளது.

குஜராத் ஜாம்நகரில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் photovoltaic cells, green hydrogen, electrolysers, batteries and fuel cells ஆகியவற்றை தயாரிக்கும் 4 ஜிகா பேக்டரியை உருவாக்க திட்டமிடப்பட்டது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கச்சா எண்ணெய் பிரிவில் வர்த்தகம் செய்யும் காரணத்தால் கிரீன் எனர்ஜி பிரிவில் வர்த்தகம் செய்யும் நியூ எனர்ஜி நிறுவனத்தை சேர்த்தால் புதிய முதலீடுகளை பெறுவதிலும், விரிவாக்கத்திலும் பல பிரச்சனைகள் வரும்.
Reliance New Energy Limited இனி தனியாக இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ள வேளையில் புதிய முதலீடுகளை ஈர்க்கும் பணிகள் மட்டும் அல்லாமல் ஐபிஓ வெளியிடவும் முடியும். அடுத்த 3 - 6 வருடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாம்ராஜ்ஜியம் முதலீட்டாளர்களின் செல்லக்குட்டியாக இருக்க போகிறது.

Reliance New Energy Limited கீழ் உருவாக்கப்பட்ட பல்வேறு நிறுவனத்தின் தலைவராக இருப்பது மட்டும் அல்லாமல் குஜராத் ஜாம்நகரில் தங்கி 4 ஜிகா பேக்டரி தொழிற்சாலை அமைக்கும் பணியில் தீவிரமாக உள்ளார் புது மாப்பிள்ளை அனந்த் அம்பானி.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications