உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் இருந்த முகேஷ் அம்பானி தற்போது அந்த பட்டியலில் பின்தங்கி இருப்பது தெரியவந்துள்ளது. ஹரன் உலக பணக்காரர்கள் பட்டியல் 2025 (Hurun Global Rich List 2025) வெளியாகியிருக்கிறது.
இதன்படி முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பில் 15 பில்லியன் டாலர்கள் குறைந்து உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேறி இருக்கிறார். அதாவது அவருடைய சொத்து மதிப்பில் 1 லட்சம் கோடி ரூபாய் வரை சரிந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானியை பொருத்தவரை முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து அவர் வெளியேறி விட்டாலும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற பெயரை தொடர்ந்து தக்க வைத்திருக்கிறார். முகேஷ் அம்பானி முதல் 10 இடங்களில் இருந்து வெளியேறுவதற்கு முக்கிய காரணம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அதன் எரிசக்தி மற்றும் சில்லறை விற்பனை பிரிவுகளில் சரியாக செயல்படவில்லை. மேலும் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு சரிந்தது. இதனால் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு கணிசமான அளவு சரிவை கண்டது.
அதாவது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 13 சதவீதம் குறைந்து இருப்பதாக இந்த ஹரன் உலக பணக்காரர் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ள தகவல் தெரிவிக்கிறது. தற்போதைக்கு இவரின் சொத்து மதிப்பு 8.6 லட்சம் கோடியாக இருக்கிறது.
உலக பணக்காரர்கள் பட்டியலில் வழக்கம் போல டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தான் முதலிடத்தில் இருக்கிறார். இந்த ஓராண்டு காலத்தில் மட்டும் எலான் மஸ்கின் சொத்து மதிப்பில் 129 பில்லியன் டாலர்கள் உயர்ந்து மொத்தம் 420 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள சொத்துக்கு சொந்தக்காரராக இருக்கிறார். டெஸ்லா நிறுவன மதிப்பு சரிவடைந்தாலும் ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் மதிப்பு உயர்ந்து எலான் மஸ்கின் சொத்து மதிப்பு உயர உதவியுள்ளது.
உலக பணக்காரர்கள் பட்டியலில் ஹெச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடாரின் மகளான ரோஷினி நாடார் 3.5 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்போடு உலக பணக்கார பெண்கள் பட்டியலில் 5ஆவது இடத்தை பிடித்திருக்கிறார். உலகின் முதல் 10 பணக்கார பெண்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஒரு பெண் இடம் பெறுவது இதுவே முதன் முறையாகும் . அண்மையில் தான் ஷிவ் நாடார் ஹெச்சிஎல் நிறுவனத்தில் தனக்கு சொந்தமாக இருந்த 47 சதவீத பங்குகளை தன்னுடைய மகளான ரோஷினி நாடாரின் பெயரில் மாற்றினார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications