முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாம்ராஜ்ஜியம் தனது முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய முதலீட்டு வாய்ப்பை கொடுத்துள்ளது. ஜூலை 20 ஆம் தேதி இந்திய பங்குச்சந்தையில் இரண்டாவதாக ஒரு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பட்டியலிடப்பட உள்ளதால் கடந்த ஒரு வாரத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் மீது அதிகப்படியான முதலீடுகள் குவிந்தது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தில் இருக்கும் ரிலையன்ஸ் ஸ்ட்ராடஜிக் இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்னும் நிதி சேவை பிரிவை ஜூலை 20 ஆம் தேதி தனியாக பிரித்து அதை மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிட உள்ளது. இதன் மூலம் முகேஷ் அம்பானியின் நீண்ட நாள் ஐபிஓ கனவு நினைவாகிறது.

மொத்த குழுமத்தில் இருந்து தனியாக பிரிக்கப்படும் காரணத்தால் ரிலையன்ஸ் பங்குகளை வைத்திருக்கும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் 1:1 என்ற கணக்கில் ரிலையன்ஸ் ஸ்ட்ராடஜிக் இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்னும் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அளிக்கப்பட உள்ளது. அதாவது யாரெல்லாம் எத்தனை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் வைத்துள்ளார்களோ, அவர்களுக்கு இதே எண்ணிக்கையில் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அளிக்கப்பட உள்ளது.
இது கிட்டத்தட்ட ஐபிஓ-வுக்க இணையான ஒரு முதலீட்டு வாய்ப்பு என்பதால் ரீடைல் முதலீட்டாளர்கள் முதல் தனியார் பங்கு முதலீட்டாளர்கள் வரையில் பெரும் தொகையை ரிலையன்ஸ் பங்குகளில் முதலீடு செய்து வருகின்றனர். இது ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் மீது அதிகப்படியான முதலீட்டு நம்பிக்கை வைத்திருக்கும் அனைவருக்கும் முக்கிய வாய்ப்பாக உள்ளது.
இதன் வாயிலாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் சந்தை மதிப்பு சுமார் 69,990.57 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது, இதனால் ரிலையன்ஸ் சாம்ரஜ்ஜியத்தின் மொத்த மதிப்பு 18.53 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து ஜெப்ரீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் 90000 முதல் 15000 கோடி ரூபாய் அளவில் மதிப்பிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஒரு பங்கு விலை 134 முதல் 224 ரூபாய் வரையில் மதிப்பிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் நாட்டின் 5வது பெரிய நிதி சேவை நிறுவனமாக உள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications