உலகின் முன்னணி எலக்ட்ரிக் வாகன நிறுவனமான திகழும் டெஸ்லா, சீனாவில் தனது ஆதிக்கத்தை இழந்து வரும் இதேவேளையில் தனது மெக்சிகோ திட்டத்தைச் செயல்படுத்த முடியாமல் இருக்கும் வேளையில் மத்திய அரசு அறிவித்த புதிய EV கொள்கை எலான் மஸ்கிற்கு ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது.
டெஸ்லா இந்தியாவில் தனது தொழிற்சாலையை அமைப்பது குறித்த திட்டம் எலான் மஸ்க்-ஏ உறுதி செய்த நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் சிறப்புக் குழு இந்தியாவுக்கு வருகைக்காகக் காத்திருக்கும் வேளையில் முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் சந்தையைக் கைப்பற்றும் கனவில் புதிய தொழிற்சாலை அமைக்கும் டெஸ்லா நிறுவனம், ஒரு கூட்டணி முறையில் இந்திய மண்ணில் கால்தடம் பதிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. டெஸ்லா தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலத்தில் நிலத்தைத் தேட உள்ளது.
டெஸ்லா உடனான கூட்டணி என்றால் கட்டாயம் பெரிய புள்ளியின் தலையீடு இருக்கும் என்பது உறுதி, அப்படி டெஸ்லா உடன் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளன.
டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் உற்பத்தி ஆலை அமைப்பதற்காக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் கூட்டு முயற்சி பற்றிய ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்த பேச்சுவார்த்தைகள் ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வருகின்றன என ஹிந்து பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
டெஸ்லா- ரிலையன்ஸ் மத்தியிலான கூட்டணி உறுதியாகும் பட்சத்தில் முகேஷ் அம்பானியின் சாம்ராஜ்ஜியம் அதிகாரப்பூர்வமாக கார் உற்பத்தி துறையில் நுழைந்துவிடும். சமீபத்தில் MG மோட்டார்ஸ் உடன் இணைந்து JSW குழுமம் ஆட்டோமொபைல் துறையில் இறங்கிய நிலையில் தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இறங்கும் முயற்சியில் இறக்கியுள்ளது.
இந்த கூட்டு முயற்சியில், இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி திறனை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்லும், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்தால் அதன் உற்பத்தி பலம், பண பலம் என அனைத்தும் புதிய உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் மறுமுனையில் கவனிக்க வேண்டியது, சீனாவில் இருக்கும் மாபெரும் ஜிகாபேக்டரி-யின் முழு உரிமையும் டெஸ்லா-விடம் தான் உள்ளது, இதேபோல் இதை மொத்தமாக டெஸ்லா கட்டுப்பாட்டில் தான் இயங்கி வருகிறது. பொதுவாகச் சீனா பொறுத்த வரையில் வெளிநாட்டு நிறுவனங்கள் கூட்டணி அடிப்படையில் தான் இயங்கும் ஆனால் டெஸ்லா சீனா அரசின் அனுமதியுடன் மொத்த தொழிற்சாலை, இயக்கம் டெஸ்லா கட்டுப்பாட்டில் உள்ளது.
இதேபோலத் தான் ஜெர்மனியிலும் பெர்லின்-ல் இருக்கும் தொழிற்சாலை மொத்தமாக டெஸ்லா கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் 100% அன்னிய முதலீட்டில் உற்பத்தி தளத்தை அமைக்கும் சட்ட விதிகள் அனுமதிக்கும் வேளையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற கூட்டணி நிறுவனம் அவசியமே இல்லை.
டெஸ்லா நிறுவனம், ஆப்பிள் போல இல்லை உற்பத்தியில் கிங். கார் உற்பத்தியில் அதிகப்படியான ஆட்டோமேஷன், புதிய கேஷ்டிங் தொழில்நுட்பத்தை எல்லாம் கொண்டு வந்தது எலான் மஸ்க். இந்த நிலையில் எலான் மஸ்க்-கிற்கு முகேஷ் அம்பானி கூட்டணி அவசியமில்லை.

ஆனால் தற்போது சந்தையில் உலா வரும் தகவல் படி டெஸ்லா - ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மத்தியிலான பேச்சுவார்த்தை ஒருமாதமாக நடந்து வருகிறது, ஆனால் கூட்டணியிவ் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கீடு குறித்து உறுதி செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் ஏப்ரல் 9 ஆம் தேதி பேசுகையில், இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி டெஸ்லா நிறுவனத்திற்கு இயற்கையாக நடந்த முன்னேற்றம் என்று தெரிவித்தார்.
இந்தியாவில் ஸ்பேஸ்எக்ஸ் வரும் போது, ஜியோ தரப்பின் எதிர்ப்பு மூலம் இன்று வரையில் ஸ்டார்லிங்க் வரவில்லை. இதையெல்லாம் தாண்டி எலான் மஸ்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முகேஷ் அம்பானி இணைந்து செயல்படுவார்களா..?


Click it and Unblock the Notifications