இந்தியாவில் வர்த்தகம் செய்தும் வெளிநாட்டு டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் அனைத்தும் அதிகப்படியான வருமானம் பார்ப்பது விளம்பரம் சேவையின் வாயிலாகத் தான். இதனாலேயே கூகுள், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவை இலவசமாகச் சேவை அளிக்கிறது.
இத்தகைய டிஜிட்டல் விளம்பர சேவையில் ஆதிக்கம் செலுத்துவது சுந்தர் பிச்சையின் கூகுள்-ம், மார்க் ஜூக்கர்பெர்க்-ன் பேஸ்புக்-ம் தான். இதன் ஆதிக்கத்தைக் குறைக்கும் திட்டத்துடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி களத்தில் இறங்கியுள்ளார்.

டிஜிட்டல் விளம்பரத் துறையில் போட்டி கடுமையாக இருக்கும் நிலையில், வயாகாம்18 நிறுவனத்திற்குச் சொந்தமான ஜியோசினிமா, தற்போது கூகுள் மற்றும் மெட்டா (பேஸ்புக், இன்ஸ்டாகிராம்) போன்ற தளங்களில் அதிகம் விளம்பரம் செய்யும் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை (SMBs) முக்கிய இலக்காகக் கொண்டு, ஐபிஎல் போட்டிகளில் விளம்பரம் செய்யும் வாய்ப்பை வழங்கியது மட்டும் அல்லாமல் மிகவும் குறைந்த கட்டணத்தில் விளம்பர ஒப்பந்தங்களை வழங்கி வருகிறது.
முகேஷ் அம்பானி எந்த துறையில் வந்தாலும் பிரச்சனை தான் என நிறுவனங்கள் புலம்பி வரும் வேளையில் தற்போது டிஜிட்டல் விளம்பரத் துறையில் இறங்கியுள்ளது சிறு போட்டியாளர்களுக்கு மட்டும் அல்லாமல் கூகுள் மற்றும் மெட்டா போன்ற பெரிய நிறுவனங்களுக்கே அதிர்ச்சி கொடுத்துள்ளது.
ஜியோசினிமா வெளியிட்டுள்ள விலைப்பட்டியலின்படி, ஒரு 1000 பார்வைக்கு (CPM - Cost Per Mille) வெறும் 25 ரூபாய் என்ற குறைந்த கட்டணத்தில் சிறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்கள் ஐபிஎல் நேரடி ஒளிபரப்பின் போது விளம்பரம் செய்யும் வாய்ப்பை கொடுத்துள்ளார் முகேஷ் அம்பானி.
ஒரு நாளுக்கான அடிப்படை ஐபிஎல் விளம்பர பேகேஜ் 12.5 லட்சம் பார்வைகளுக்கு (impressions) 50,000 ரூபாய் என்ற விலையில், அதாவது 1000 இம்பிரஷனுக்கு 40 ரூபாய் என்ற கணக்கில் ஜியோசினிமா சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான விளம்பர பேகேஜ் அளிக்கிறது. இதேபோல், 50 லட்சம் இம்பிரஷனுக்கு கிட்டத்தட்ட 2 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.
குறிப்பாக, ஐபிஎல் போட்டிகள் வார நாள்களில் விளம்பர கட்டணம் 50,000 ரூபாயாகவும், வார இறுதி நாள்களில் 65,000 ரூபாயாகவும் இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் 2024 ஐபிஎல் சீசனுக்கு 4,000 விளம்பரதாரர்கள் உடன் விளம்பர ஒப்பந்தம் கையெழுத்திட ஜியோசினிமா முயற்சித்து வருகிறது.
"கூகுள் மற்றும் மெட்டா போன்ற நிறுவனங்களின் டிஜிட்டல் விளம்பர வளர்ச்சிக்கும் அதிகப்படியான வருவாய்க்கும் முக்கிய காரணமாக இருப்பவை சிறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்கள் (SMBs) தான். இவர்களையே தற்போது ஜியோசினிமா இலக்காகக் கொண்டுள்ளது.
விளையாட்டுப் போட்டிகளின் லைவ் ஒளிபரப்பின் போது விளம்பரம் செய்யும் வாய்ப்பை வழங்குவது சிறு வணிகர்களுக்குக் கவர்ச்சிகரமானதாக இருக்கும்" என்று ஒரு விளம்பரத்துறை நிபுணர் கருத்து தெரிவித்தார்.
கிரிக்கெட் போட்டியின் போதும் விளம்பரம் செய்வதெல்லாம் பெரிய விஷயம் என்ற காலம் போய், வெறும் 50000 ரூபாய் இருந்தால் 12 பார்வையாளர்களுக்கு நம்முடைய விளம்பரத்தைக் காட்ட முடியும் என நிலையை ஜியோ சினிமா உருவாக்கியுள்ளது.
மேலும், டிஜிட்டல் விளம்பரத்திற்காகப் பெரிய நிறுவனங்களை மட்டும் நம்பியிருப்பதைக் குறைத்து இந்திய நிறுவனம் இப்பிரிவில் உருவெடுத்துள்ளது முக்கியமான முன்னேற்றம், மேலும் நீண்ட காலத்திற்கு நிலையான வருமானத்தை ஈட்டுவதற்கு சிறு வணிகர்களை வாடிக்கையாளர்களாக மாற்றுவது ஜியோசினிமாவுக்கு பலன் அளிக்கும் என்றும் விளம்பரத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
Ficci-EY வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டில் டிஜிட்டல் விளம்பர செலவு 15 சதவீதம் அதிகரித்து ரூபாய் 57,600 கோடியாக உயர்ந்துள்ளது. இதில், சிறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்களின் (SMEs) விளம்பர செலவு ரூபாய் 20,000 கோடியாக இருந்தது. இந்தியாவில் டிஜிட்டல் விளம்பரத்திற்காக செலவு செய்யும் தொகை தொடர்ந்து அதிகரிக்கும் என அந்த அறிக்கை கணித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே SMB நிறுவனங்களுக்கான விளம்பர திட்டத்தை ஜியோசினிமா வகுத்துள்ளது.
ஜியோசினிமாவின் திட்டங்கள்: சிறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்களைக் கவர, ஜியோசினிமா பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.
நகர அளவிலான இலக்கு வைத்தல்: பிராண்டுகள் குறிப்பிட்ட நகரங்களை மட்டும் இலக்காகக் கொண்டு விளம்பரம் செய்யும் வசதியை ஜியோசினிமா வழங்குகிறது. இது சிறு வணிக நிறுவனங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
முக்கிய சேவை: SMB நிறுவனங்களுக்கான விளம்பர வடிவமைப்பு மற்றும் Campaigns நிர்வகிப்பதற்கான ஆதரவையும் ஜியோசினிமா வழங்குகிறது. சிறு வணிக நிறுவனங்கள் தங்களது விளம்பர Campaigns சுயமாகவே கையாளும் வகையில் ஒரு சுய சேவை தளத்தை ஜியோசினிமா உருவாக்கியுள்ளது.
விளம்பர பேகேஜ்: ஜியோசினிமா 5, 10 மற்றும் 15 நாள் பேஸ் பேக் ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையிலான தொகைக்கு வழங்குகிறது. இதில் சிபிஎம் விலைகள் ரூ.35 முதல் ரூ.45 வரை இருக்கும். ஐபிஎல் பிளேஆஃப்கள் மற்றும் இறுதிப் போட்டிகளின் போது ரூ.55 சிபிஎம் விலையில் ரூ.7.5 லட்சம் செலவழித்து SMB நிறுவனங்கள் விளம்பரம் செய்யலாம்.
மேலும் முழு ஐபிஎல் சீசனிலும் விளம்பரம் செய்ய, SMBகள் ரூ.10 லட்சம் செலவழிக்க வேண்டும், இதன் மூலம் 40 மில்லியன் இம்ப்ரெஷன்களுடன் ரூ.25 சிபிஎம்க்கு விளம்பரம் செய்யும் வாய்ப்பை வழங்குகிறது.
ஜியோசினிமாவின் திட்டம் வெற்றி பெறுமா?- ஜியோசினிமாவின் இந்த திட்டம் வெற்றி பெறுமா என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
குறைந்த செலவு: பொதுவாகக் கூகுள் மற்றும் மெட்டா போன்ற தளங்களில் விளம்பரம் செய்வது அதிக செலவாக இருக்கும். இதனை விட குறைந்த செலவில் ஐபிஎல் போன்ற பிரபலமான விளையாட்டு நிகழ்வின் போது விளம்பரம் செய்யும் வாய்ப்பை ஜியோசினிமா வழங்குகிறது. இது சிறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு ஜாக்பாட் இருக்கும்.
அதிக அளவிலான பார்வையாளர்கள்: ஐபிஎல் போன்ற பெரிய விளையாட்டு நிகழ்வுகள் இந்தியாவில் மிகப்பெரிய பார்வையாளர்களைக் கொண்டுள்ளது. இதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்கள் பெரிய அளவிலான மக்களைச் சென்றடைய முடியும்.
போட்டி: டிஜிட்டல் விளம்பரத் துறையில் ஏற்கனவே பல நிறுவனங்கள் இருப்பதால், ஜியோசினிமா கடும் போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கூகுள் மற்றும் மெட்டா போன்ற நிறுவனங்கள் பல விதமான விளம்பர வடிவங்களை வழங்குகின்றன. இதற்கு மாற்றாக, ஜியோசினிமா தற்போது ஐபிஎல் போட்டிகளின் போது மட்டுமே விளம்பர வாய்ப்புகளை வழங்குகிறது.
மொத்தத்தில், ஜியோசினிமாவின் இந்த தந்திரோபாய திட்டம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு புதிய கதவுகளை திறந்துள்ளது. இதனால் பலரும் பலனடைய வாய்ப்புகள் உள்ளது, ஆனால் முகேஷ் அம்பானியின் திட்டம் எந்த அளவுக்கு உண்மையிலேயே பயனுள்ளதாக உள்ளது என்பதை ஐபிஎல் முடிந்து களநிலவரத்தை ஆய்வு செய்தால் மட்டுமே தெரியும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications