முகேஷ் அம்பானி துவங்கிய புதிய நிறுவனம் RSOUL.. இனி ரியல் எஸ்டேட் துறையும் ஆட்டம் காணும்..!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் புதிய துறையில் வர்த்தகத்தை துவங்குவதற்காக புதிய நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.

இந்திய பொருளாதாரம் டிசம்பர் காலாண்டில் மந்தமான வளர்ச்சியை பதிவு செய்திருந்தாலும் உலக நாடுகளை ஒப்பிடுகையில் சிறப்பான வளர்ச்சி பாதையில் உள்ளதாகவே ஆய்வுகள் கூறுகிறது.

இந்தியாவில் சேவை துறையை தாண்டி உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு அதிகப்படியான முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலையில் நாட்டின் வர்த்தக சந்தை பெரிய அளவில் விரிவாக்கம் அடையும் சூழ்நிலை உருவாக்கியுள்ளது.

கமர்சியல் ரியல் எஸ்டேட்

கமர்சியல் ரியல் எஸ்டேட்

இந்த நிலையில் இந்தியா முழுவதும் கமர்சியல் ரியல் எஸ்டேட் துறை ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது, இதில் பெரிய அளவிலான வர்த்தகத்தை பெற வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் Reliance SOU என்ற புதிய கமர்சியல் ரியல் எஸ்டேட் துறை நிறுவனத்தை துவங்கியுள்ளது.

 Reliance SOU நிறுவனம்

Reliance SOU நிறுவனம்

ஆசியாவின் பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி இப்புதிய Reliance SOU நிறுவனத்தை 1 லட்சம் ரூபாய் முதலீட்டு துவங்கியிருந்தாலும் தாய் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தொடர்ந்து இப்புதிய நிறுவனத்தில் முதலீடு செய்யும் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். இப்புதிய Reliance SOU Limited (RSOUL) எவ்விதமான கூட்டணியும் இல்லாமல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கீழ் இயங்கும் 100 சதவீதம் உரிமை கொண்ட கிளை நிறுவனமாகும்.

RSOUL பெயர் டக்கர்

RSOUL பெயர் டக்கர்

Reliance SOU Limited (RSOUL) நிறுவனத்தின் மூலம் இந்தியா முழுவதும் கமர்சியல் ரியல் எஸ்டேட் சொத்துக்களை உருவாக்க உள்ளது. இத்துறையில் ஏற்கனவே அதானி ப்ராப்பெர்டீஸ், டாடா ரியாலிட்டி & இன்பராஸ்டக்சர், ஷாபூர்ஜி பலோன்ஜி & கோ என பல நிறுவனங்கள் இத்துறையில் இருக்கும் வேளையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருகை பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வளர்ச்சி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வளர்ச்சி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் கடந்த 6-7 வருடத்தில் வெறும் எனர்ஜி நிறுவனமாக இருந்து பல துறையில் கொடிக்கட்டி பறக்கும் அளவுக்கு வர்த்தகதக்தை விரிவாக்கம் செய்து வெற்றி நடை போடுகிறது என்றால் மிகையில்லை.

ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட்


இந்த நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் புதிதாக நுழைந்துள்ள பிற வர்த்தகத்தை பார்க்கும் போது ரியல் எஸ்டேட் துறை பெரிய கஷ்டமான விஷயமில்லை, ஆனால் எவ்வளவு வேகமாக செயல்பட போகிறது என்பது தான் மிகவும் முக்கியமான விஷயமாக உள்ளது.

பந்திரா குர்லா

பந்திரா குர்லா

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இதற்கு முன்பு 2019ல் ரியல் எஸ்டேட் துறையில் ஆர்வம்காட்டியது, Bandra Kurla Complex திட்டத்தில் 65 சதவீத பங்குகளை 1105 கோடி ரூபாய்க்கு வாங்கியதன் மூலம் Reliance Navi Mumbai Infra Development என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை உருவாக்கியது. ரிலையன்ஸ் தற்போது ஜியோ வோல்டு சென்டர், ஜியோ வோல்டு கார்டன் என இரு முக்கியமான ரியல் எஸ்டேட் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+