இந்தியாவின் மிகவும் பணக்கார குடும்பங்களில் ஒன்றான அம்பானி குடும்பம் தங்களுடைய ஆடம்பர கார் கலெக்ஷனில் ஒரு புதிய காரை சேர்த்து விரிவுபடுத்தியுள்ளனர். இந்த முறை, அம்பானி குடும்பம் இந்தியாவிலேயே முதல் புலட்புரூஃப் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை வாங்கியுள்ளனர்.
அம்பானி குடும்ப கேரேஜான 'ஜியோ கேரேஜில்' ஏராளமான சொகுசுக் கார்களை வைத்திருக்கிறார்கள். அதன் எண்ணிக்கை துல்லியமாக தெரியவில்லை என்றாலும், இந்தியாவிலேயே மிகப்பெரிய பிரைவேட் கார் கலெஷனில் ஒன்றாக இது இருக்கும் என கருதப்படுகிறது.

ஏற்கனவே பல ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார்களை அம்பானி குடும்பம் வைத்திருந்தாலும், இந்த புதிய கார் இந்தியாவிலேயே முதல் புலட்புரூஃப் கல்லினன் என்பது தனிச் சிறப்பு.
இந்த சிறப்பு புலட்புரூஃப் கல்லினனின் புகைப்படங்கள் சமீபத்தில் ஆட்டோமொபிலி ஆர்டன்ட் இந்தியா மூலம் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது. சண்டிகரில் உள்ள ஒறு நிறுவனத்தில் இந்த வெள்ளி நிற ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காருக்கு புலட்புரூஃப் மேம்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக இந்நிறுவனம் அறிந்து புகைப்படத்தை வெளியிட்டு உள்ளது.

அம்பானி குடும்பத்திற்கு அவ்வப்போது கொலை மிரட்டல் வரும் வேளையில், இக்குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் அதிகப்படியான பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக முகேஷ் அம்பானி, நீதா அம்பானி ஆகியோருக்கு Z+ ரக உயர் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இதையும் தாண்டி தற்போது புலட்புரூஃப் கல்லினன் காரை பெற்றுள்ளார் முகேஷ் அம்பானி.
இது கல்லினன் சீரிஸ் 1 மாடல் எனத் தெரிகிறது. இது அம்பானி குடும்பத்தின் ஏற்கனவே உள்ள கார் சேகரிப்பில் இருந்திருக்கலாம் அல்லது புது கார் வாங்கியிருக்கலாம். பழைய காராக இருந்தால் தற்போது புதிதாக மாடிஃபை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் தெரிகிறது. முகேஷ் அம்பானி பொதுவாக அதிக பாதுகாப்புடன் கூடிய மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ் 680 கார்ட் செடான்களில் பயணிப்பது வழக்கம்.

ஆனால், இந்தியாவில் எஸ்யூவி கார்களின் மோகம் வளர்ந்து வரும் காரணமாக, ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை அதிகளவில் பயன்படுத்த திட்டமிட்டு இந்த புலட்புரூஃப் மேம்பாடு செய்யப்பட்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார் ஒரு ஆடம்பரத்தின் உச்சம். 6.75 லிட்டர் இரட்டை டர்போ சார்ஜ் V12 என்ஜின் கொண்ட இந்த கார் மிகவும் சக்தி வாய்ந்தது.


Click it and Unblock the Notifications