இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கால்பந்து ஜாம்பவான் டேவிட் பெக்காமுக்கு அம்பானி குடும்பத்தினர் அவர்களது வீட்டில் கிளாஸான விருந்தை அளித்தனர். உலகின் மிகவும் பிரபலமான கால்பந்து வீரர் மட்டும் அல்லாமல் இப்போது ஒரு கால்பந்து அணியின் உரிமையாளராகவும் டேவிட் பெக்காம் உயர்ந்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான அபார வெற்றி பெற்ற தருணத்தையும், இந்தியர்கள் கிரிக்கெட்-ஐ எந்த அளவுக்குக் கொண்டாடுகிறார்கள் என்பதை டேவிட் பெக்காம் நேரில் பார்த்து வியந்துள்ளார்.

UNICEF நல்லெண்ண தூதராக டேவிட் பெக்காம் அரையிறுதி போட்டியில் கலந்துகொண்ட நிலையில், சச்சின் டெண்டுல்கருடன் வான்கடே ஸ்டேடியத்தில் போட்டியை பார்த்தார். இதன் பின்பு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை சந்தித்து மாபெரும் வெற்றிக்கு வாழ்த்துக் கூறினார்.
டேவிட் பெக்காம்-இன் இந்தியா விசிட் மிகவும் அரிதானது மட்டும் அல்லாமல் முதல் முறை என்பதால், இதை மேலும் சிறப்பாக்க முகேஷ் அம்பானி அவரது மும்பை அன்டாலியா வீட்டு விருந்துக்கு அழைத்தார். இதை மறுக்க முடியாத டேவிட் பெக்காம் அம்பானி வீட்டு அழைப்பை ஏற்று வியாழக்கிழமை வந்தார்.
வியாழக்கிழமை அன்டாலியா வீட்டில் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீதா அம்பானி, மகள் இஷா அம்பானி மற்றும் மகன் ஆகாஷ் அம்பானி ஆகியோருடன் ஷ்லோகா மேத்தா மற்றும் அனந்த் அம்பானியின் வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சன்ட் டேவிட் பெக்காம்-க்கு விருந்து அளித்த பின்பு ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது அம்பானி குடும்பத்தினர் டேவிட் பெக்காமுக்கு அவருடைய பெயரிடப்பட்ட மும்பை இந்தியன்ஸ் ஜெர்சியை அவருக்குப் பரிசாக அளித்தனர். அம்பானி குடும்பம் கால்பந்து ஜாம்பவான் '1 பெக்காம்' ஜெர்சியை வைத்திருக்கும் படத்தையும் வெளியிட்டு உள்ளனர்.
வான்கடே மைதானத்தில் ஆகாஷ் அம்பானியும், டேவிட் பெக்காமும் ஒன்றாகப் போட்டியை பார்த்தனர். இவர்களுடன் நடிகர்கள் கியாரா அத்வானி, சித்தார்த் மல்ஹோத்ரா, ரன்பீர் கபூர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கௌதம் மேனன், தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேரகன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அரையிறுதி போட்டியின் முடிவில் ரோஹித் ஷர்மா தனது இந்திய ஜெர்சியை டேவிட் பெக்காமுக்கு பரிசாக வழங்கினார், பதிலுக்குப் பெக்காம் ரோஹித்துக்கு ரியல் மாட்ரிட் ஜெர்சியை வழங்கினார். கால்பந்து ஜாம்பவான் 2003 முதல் 2007 வரை ஸ்பானிஷ் கால்பந்து கிளப்பான ரியல் மாட்ரிட்டில் விளையாடினார்.
டேவிட் பெக்காம் இந்திய பயணம் குறித்துப் பேசுகையில், நான் இந்தியாவுக்கு வருவதற்கு நீண்ட நாட்களாகக் காத்திருக்கிறேன், இதுவே எனது முதல் இந்திய பயணம். UNICEF உடனான எனது பணி நீண்ட காலத்திற்கு முன்பு தாய்லாந்தில் உள்ள மான்செஸ்டர் யுனைடெட் அணியுடன் 17 வயதாக இருந்தபோது தொடங்கியது.
பின்னர் 2015 இல் UNICEFன் உலகளாவிய தூதராக ஆனேன், UNICEF உடன் இணைந்து சிறுவர்கள் மற்றும் சிறுமிகளின் நலனில் கவனம் செலுத்துகிறோம் என்று டேவிட் பெக்காம் கூறினார்.



More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications