அபுதாபி-யில் முதல் முதலீட்டை செய்த முகேஷ் அம்பானி.. 2 பில்லியன் டாலரில் புதிய தொழிற்சாலை..!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நீண்ட காலமாக அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்தின் கிளை நிறுவனமான RSC (TA'ZIZ) கூட்டணியில் மிகப்பெரிய பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலை கட்ட திட்டமிட்டு வந்த நிலையில் தற்போது இந்த ஒப்பந்தம் முக்கிய இடத்திற்கு வந்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்புப் பிரிவில் சவுதி அரேபியாவின் ஆராம்கோ நீண்ட காலப் பேச்சுவார்த்தை மற்றும் ஆய்வு செய்த பின்பு முதலீடு செய்ய முடியாது எனக் கைவிரித்த நிலையில் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்துடன் கூட்டணியும் கைவிடப்படும் என முதலீட்டாளர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது.

 பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலை

பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலை

ஐக்கிய அரபு நாடுகளின் அரசு மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இணைந்து சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் பிரம்மாண்ட பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலையை உருவாக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முதல் மத்திய கிழக்கு முதலீடு இதுதான்.

 பிளாஸ்டிக் மூலப்பொருட்கள்

பிளாஸ்டிக் மூலப்பொருட்கள்

உலகம் முழுவதும் தற்போது பிளாஸ்டிக் மூலப் பொருட்களுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ள வேளையில் அபுதாபி அரசின் TA'ZIZ மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இணைந்து ஹைட்ரோகார்பன்-ஐ பல்வேறு உற்பத்தி பொருட்களாக மாற்றும் தொழிற்சாலையை நிறுவ உள்ளது.

 உற்பத்தி பொருட்கள்

உற்பத்தி பொருட்கள்

ரிலையன்ஸ் முதலீட்டில் உருவாகும் இந்தத் தொழிற்சாலை TA'ZIZ EDC & PVC என்ற பெயரில் உருவாக உள்ளது. இப்புதிய கூட்டணி அமைக்கும் தொழிற்சாலையில் குளோர்-ஆல்கலி, எத்திலீன் டைகுளோரைடு (EDC), மற்றும் பாலிவினைல் குளோரைடு (PVC) ஆகியவற்றைத் தயாரிக்க உள்ளது.

 Ta’ziz தொழிற்பேட்டை

Ta’ziz தொழிற்பேட்டை

இந்தப் புதிய தொழிற்சாலையை அபுதாபியில் இருக்கும் அல் ருவைஸ் பகுதியில் இருக்கும் Ta'ziz தொழிற்பேட்டையில் அமைக்க உள்ளதாக இக்கூட்டணி தெரிவித்துள்ளது. அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் OPEC நாடுகளில் 3வது பெரிய உற்பத்தி நிறுவனம்.

 அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம்

அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம்

Ta'ziz தொழிற்பேட்டை என்பது பெட்ரோ கெமிக்கல் துறைக்காகவே உருவாக்கப்பட்ட தொழிற்பூங்கா. அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் Ta'ziz திட்டத்தில் மட்டும் சுமார் 5 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைத் திரட்ட இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

 முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

இந்த முக்கியமான திட்டத்திற்காக ஐக்கிய அரபு நாட்டின், அபுதாபி குளோபல் மார்கெட் சந்தையில், முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டர்நேஷனல் லிமிடெட் என்ற புதிய நிறுவனத்தைத் துவங்கியுள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். இது முழுக்க முழுக்க வெளிநாட்டு நிறுவனம்.

 ரிலையன்ஸ் இண்டர்நேஷன்ல்

ரிலையன்ஸ் இண்டர்நேஷன்ல்

ரிலையன்ஸ் இண்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தை 1 மில்லியன் டாலர் முதலீட்டில் 1 டாலர் வீதம் 10 லட்சம் பங்குகளைக் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளதாகப் பங்குச்சந்தைக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் ரிலையன்ஸ் இண்டர்நேஷனல் லிமிடெட் 100 சதவீதம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கிளை நிறுவனமாகும்.

கூட்டணி

கூட்டணி

தற்போது Ta'ziz தொழிற்பேட்டையில் உருவாக்கப்படும் பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலை அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் ரிலையன்ஸ் இண்டர்நேஷனல் கூட்டணி நிறுவனத்தில் தான் உருவாக்கப்படுகிறது. மேலும் இந்தத் தொழிற்சாலை அடுத்த 3 வருடத்திற்குள் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ரிலையன்ஸ் பங்குகள்

ரிலையன்ஸ் பங்குகள்

அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கூட்டணி அறிவிப்பும் 2 பில்லியன் டாலர் தொழிற்சாலை மூலம் ஏற்படும் வர்த்தகம் வாயிலாக இன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் சுமார் 2 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து 2431.45 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+