உலகம் முழுவதும் Fossil Fuel எனப்படும் புதைபடிவ எரிபொருட்களை அடிப்படையாக தான் தனது பொருளாதாரம், வர்த்தகத்தை கட்டமைத்து வந்தது. ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக பருவநிலை மாற்றம் காரணமாக மாற்று எரிசக்தி, கிளீன் எனர்ஜி, கிரீன் எனர்ஜி என பல பெயர்களில் உலகமே தற்போது ரினியூவபிள் எனர்ஜி பாதையை தேர்ந்தெடுத்து பயணித்து வருகிறது.
இது மட்டும் அல்லாமல் உலக நாடுகள் கார்பன் வெளிப்பாட்டை குறைக்கும் வகையில் நெட் ஜீரோ நிலையை அடைவதற்கான இலக்கையும் நிர்ணயம் செய்துள்ளது. இதன் மூலம் தற்போது ரினியூவபிள் எனர்ஜி துறை அதிகப்படியான பணம் புழங்கும் துறையாக மாறியுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான ஆந்திராவில் சுமார் 25 ஜிகாவாட் ரினியூவபிள் பவர் உருவாகும் மாபெரும் திட்டத்தை உருவாக்க உள்ளதாக இந்திய பில்லியனர்களான முகேஷ் அம்பானியும் கௌதம் அதானியும் தெரிவித்தனர்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ஆந்திர மாநிலத்தில் 10 ஜிகாவாட் சூரிய சக்தியை உருவாக்கும் என்று ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, வெள்ளிக்கிழமை மாநிலம் ஏற்பாடு செய்த முதலீட்டாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.
அதானி போர்ட்ஸ்
அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் ஸோன் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி கரண் அதானி, அடுத்த சில ஆண்டுகளில் ஆந்திராவில் ஐந்து மாவட்டங்களில் 15 ஜிகாவாட் அளவிலான ரினியூவபிள் எனர்ஜி கட்டமைப்புகளை உருவாக்க தனது குழு உறுதிபூண்டுள்ளது என்று கூறினார்.
ஆந்திரப் பிரதேசம்
ஆந்திரப் பிரதேசத்தில் இந்தத் திட்டங்களுக்கான முகேஷ் அம்பானியும், கரண் அதானியும் எவ்வளவு முதலீட்டு செய்ய உள்ளனர் என்பகை இரு வர்த்தக சாம்ராஜ்ஜியங்களும் வெளியிடவில்லை. 2022 ஆம் ஆண்டின் துவக்கத்தில் டாவோஸ்-ல் நடந்த முக்கியமான வர்த்தக கூட்டத்தில் ஆந்திர முதல்வர், கௌதம் ஆதானி 1.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு திட்டத்திற்கு MoU கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.
முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தனது மாபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை பெட்ரோகெமிக்கல் மற்றும் சுத்திகரிப்பு அடிப்படையில் கட்டமைத்த நிலையில் கடந்த சில வருடங்களாக எதிர் திசையில் அதாவது கிரீன் எனர்ஜி துறையில் 75 பில்லியன் டாலர் முதலீடு செய்ய தயாராகியுள்ளது.
கௌதம் அதானி
இதேபோல் நிலக்கரி, அனல் மின்நிலையம் என புதைபடிவ எரிபொருட்களை அடிப்படையாக கொண்ட வர்த்தக சாம்ராஜ்ஜியமான அதானி குழுமம் சுமார் 70 பில்லியன் டாலர் அளவிலான தொகையை கிரீன் எனர்ஜியில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
ஆந்திர முதலீடுகள்
ஆந்திராவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஏற்கனவே KG-D6 basin-ல் சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதேபோல் அதானி குழுமம் 10 மில்லியன் டன் உற்பத்தி திறன் கொண்ட இரு சிமெண்ட் தொழிற்சாலையை ஆந்திராவில் கொண்டு உள்ளது. தற்போது 25 ஜிகாவாட் ரினியூவபிள் பவர் உருவாகும் திட்டம் புதிய திட்டமாக உள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications