முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸும் கௌதம் அதானியின் அதானி குரூப்பும் இந்தியாவில் பல்வேறு துறைகளில் தங்களது வணிகத்தை பெருக்கி வருகின்றன. இந்த இரு நிறுவனங்களும் அண்மையில் எலக்ட்ரோலைஸர் திட்டத்திற்கான மத்திய அரசின் புரொடக்ஷன் லிங்க்டு இன்சென்டிவ் ஸ்கீம் மீது ஆர்வம் தெரிவித்துள்ளது.
கிரீன் ஹைட்ரஜன் தயாரிக்கும் எலக்ட்ரோலைஸர் திட்டத்தை அமைக்க சுமார் 21 நிறுவனங்கள் போட்டி போட்டிப்போட்டு மத்திய அரசின் PLI திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளது. எதிர்காலம் எரிபொருள் வர்த்தகத்தில் கிரீன் ஹைட்ரஜன் என கூறப்படும் வேளையில் ரிலையன்ஸ், ஜின்டால், அதானி என பல பெரிய சாம்ராஜ்ஜியங்கள் களத்தில் ஒன்றாக இறங்கியுள்ளது.

2023 ஜனவரியில் தேசிய கிரீன் ஹைட்ரஜன் மிஷன் திட்டத்தை மத்திய அமைச்சகம் அனுமதி வழங்கியது. தூய்மையான ஆற்றல் உற்பத்தியை இந்தியாவில் நடைமுறைப்படுத்துவதற்காக ரூ.19,744 கோடி செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
இதன் மூலம் 2030 ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 50 லட்சம் மெட்ரிக் டன் கிரீன் ஹைட்ரஜன் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இலக்கை அடைய தான் ரூ.19,744 கோடி செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தில் முன்னோடியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஏற்கனவே பல நிறுவனங்கள் களத்தில் இறங்கியுள்ள நிலையில் மத்திய அரசின் PLI திட்டத்திற்கு ரிலையன்ஸ் எலக்ட்ரோலைசர், அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ், எல்&டி எலக்ட்ரோலைசர்ஸ், பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் உள்பட 21 நிறுவனங்கள் எலக்ட்ரோலைஸர்களை தயாரிக்க மானியத்துக்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது.
இந்தியன் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் 1.5 கிகா வாட் எலக்ட்ரோலைஸர் உற்பத்தி திறன் கொண்ட கட்டமைப்பை அமைக்க விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளது. ஆண்டுக்கு 3.4 கிகா வாட் எல்க்ட்ரோலைஸர் உற்பத்திக்கான மானியத்தை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும். ஹைட்ரோஜன் உற்பத்திக்கு முக்கிய பங்கு வகிக்கிறது இந்த எலக்ட்ரோலைஸர்கள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதானி குரூப் தவிர ஹில்ட் எலெக்ட்ரிக் பிரைவேட், ஓமியம் ஆபரேஷன்ஸ், ஜான் காக்ரெல் கிரீன் ஹைட்ரஜன் சொல்யூஷன்ஸ், வருண் எனர்ஜிஸ், ஜிண்டால் இந்தியா, அவாடா எலக்ட்ரோலைசர், கிரீன் எச்2 நெட்வொர்க் இந்தியா, அத்வைட் இன்ஃப்ராடெக், ஏசிஎம்இ கிளீன்டெக் சொல்யூஷன்ஸ், ஓரியானா பவர், மேட்ரிக்ஸ் கேஸ் அண்ட் ரென்யூவபிள்ஸ், ஹோமிட்ரஸ், ஹைட்ரஜன் நியூட்ரெஸ் சி டாக்டர் & கம்பெனி, பிரதிஷ்னா இன்ஜினியர்ஸ், லிவ்ஹை எனர்ஜி ஆகிய நிறுவனங்கள் இந்த மானிய விண்ணப்பத்தை கொடுத்துள்ளது.
இத்துடன் 5.53 லட்சம் டன் கிரீன் ஹைட்ரோஜன் உற்பத்திக்காக 14 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. இவர்களுடன் Torrent Power, Reliance Green Hydrogen, Bharat Petroleum ஆகிய நிறுவனங்கள் போட்டியில் இருக்கின்றன.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications