இந்திய பங்குச்சந்தையில் கடந்த 5 வருடத்தில் பங்கு முதலீட்டாளர்களுக்கு அதிகப்பிடியான லாபத்தை கொடுத்த முன்னணி நிறுவனங்கள் (ஜனவரி 23, 2023-க்கு முன்பு வரையில்) என்றால் டக்குன்னு சொல்ல முடியும் இது அதானி குழு நிறுவனங்கள் தான்.
அதானி குழுமம் தனது வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை தனித்தனியாக உடைத்து இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிட்டு உள்ளதன் மூலம் ஒவ்வொரு முக்கிய வளர்ச்சி அறிவிப்புகளுக்கும் தடாலடியாக உயர்ந்து அதானி குழுமத்தின் சந்தை மதிப்பை உயர்த்தியது. இந்த பார்மூலா-வை தான் டாடா குழுமம் பின்பற்றுகிறது.

ஆனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பொறுத்த வரையில் அனைத்து வர்த்தகமும் ஓரே குடைக்குள் இருக்கும் காரணத்தால் அதன் உண்மையான மதிப்பீட்டை முதலீட்டாளர்களாலும், அதன் உரிமையாளருமான முகேஷ் அம்பானியும் பெற முடியவில்லை.
இந்த நிலையில் தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஐபிஓ வெளியிட முடிவு செய்தது. ஆனால் அதற்கான வாய்ப்பும், சந்தை நிலவரமும் சரிவர இல்லாத காரணத்தால் முதல் முயற்சியாக ஜூலை 20 ஆம் ரிலையன்ஸ் குழுமத்தின் நிதி சேவை பிரிவான Reliance Strategic Investments நிறுவனத்தை தனியாக பிரித்து Jio Financial Services என பெயர் மாற்றப்பட்டு பங்குச் சந்தைகளில் வர்த்தகம் செய்ய பட்டியலிடப்பட உள்ளது.
இதற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலீட்டாளர் வைத்திருக்கும் பங்கிற்கும் 1:1 கணக்கில் Jio Financial Services பங்குகள் அளிக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஜூலை 20 ஆம் தேதி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை வைத்திருக்கும் 36 லட்ச முதலீட்டாளர்களும் ஒன்னு வாங்கினா ஒன்னு இலவசம் என்ற கணக்கில் 10 RIL பங்குகள் வைத்திருந்தால் 10 JFSL பங்குகள், 100 RIL பங்குகள் வைத்திருந்தால் 100 JFSL பங்குகள், 100000 RIL பங்குகள் வைத்திருந்தால் 100000 JFSL பங்குகள் அளிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் ஜூலை 20 ஆம் தேதி மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் JFSL எனப்படும் Jio Financial Services limited பங்குகளின் விலையை கணக்கிட வியாழக்கிழமை காலை 9-10 மணிக்கு சிறப்பு pre-open session-ல் கணக்கிடப்பட உள்ளது.
இந்த சிறப்பு pre-open session-ல் Jio Financial Services limited பங்குகளின் நிலையான விலை அதாவது கான்ஸ்டென்ட் விலை கணக்கிடப்படும். புதன்கிழமை வர்த்தக முடிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் விலைக்கும், சிறப்பு ப்ரீ-ஓபன் வர்த்தகத்தில் பெறப்பட்ட விலைக்கும் உள்ள வித்தியாசத்தை Jio Financial Services limited பங்கு விலையாக நிர்ணயம் செய்யப்படும்.

புதன்கிழமை வர்த்தக முடிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 2840.00 ரூபாய் விலைக்கு முடிந்துள்ளது. உதாரணமாத இதை அடிப்படையாக வைத்து வியழக்கிழமை சிறப்பு ப்ரீ-ஓபன் வர்த்தகத்தில் 3040 ரூபாய்க்கு வர்த்தகமானால் Jio Financial Services limited பங்கு விலை 200 ரூபாய்.
ஜெப்ரீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் 90000 முதல் 150000 கோடி ரூபாய் அளவில் மதிப்பிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஒரு பங்கு விலை 134 முதல் 224 ரூபாய் வரையில் இருக்கும் என கணக்கிடப்பட்டு உள்ளது.
இதேபோல் ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் 160 ரூபாயாகலும், ஜேபி மோர்கன் 189 ரூபாயாகவும், ஜெப்ரீஸ் 179 ரூபாய் எனவும் தங்களுடைய கணிப்பை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் கிட்டதட்ட 1 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பீட்டை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications