ரிலையன்ஸ்-க்குள் வந்த ஐரா பிந்த்ரா.. முகேஷ் அம்பானி-யின் ஸ்பெஷல் அறிவிப்பு.. யாரும்மா நீ..?!

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் மனிதவள மேலாண்மை, லீடர்ஷிப் மேம்பாடு மற்றும் திறமை மேம்பாடு ஆகிய 3 முக்கிய பிரிவுகளுக்கும் பொறுப்பாளராக ஐரா பிந்த்ராவை புதிய குழுமத் தலைவராக (Group President) நியமித்துள்ளார்.

கச்சா எண்ணெய் முதல் டெலிகாம் வரை பல்வேறு துறைகளில் இயங்கி வரும் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம் தற்போது அடுத்த தலைமுறை கையில் மாறும் வேளையில், அதற்கு ஏற்றார் போல் மொத்த நிர்வாகத்தையும், இயக்கத்தையும் மாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த முக்கியமான பணியை செய்யவே ஐரா பிந்த்ராவை புதிய குழுமத் தலைவராக நியமித்துள்ளார்.

ரிலையன்ஸ்-க்குள் வந்த ஐரா பிந்த்ரா.. முகேஷ் அம்பானி-யின் ஸ்பெஷல் அறிவிப்பு.. யாரும்மா நீ..?!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ல் வழக்கமாக, மூத்த அதிகாரிகள் நியமிக்கும் தொடர்பான அறிவிப்புகள் அனைத்தும், இப்பிரிவின் தலைவர்களால் வெளியிடப்படும். ஆனால் ஐரா பிந்த்ராவின் நியமனத்தை ரிலையன்ஸ் தலைவரும், நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானியே தனிப்பட்ட முறையில் அறிவித்தார். இதுலேயே இவருடைய நியமனம் எவ்வளவு முக்கியமானது என புரிந்திருக்கும்.

ஐரா பிந்த்ரா இதற்கு முன்பு அமெரிக்காவின் மெட்ரானிக் (Medtronic) நிறுவனத்திலிருந்து பணியாற்றி வந்தார், அங்கு அவர் மனிதவள பிரிவு தலைவர் மற்றும் உலகளாவிய பிராந்தியங்களின் துணைத் தலைவர் பதவியை வகித்துள்ளார்.

47 வயதான ஐரா பிந்த்ரா, அம்பானி குடும்பத்திற்கு வெளியே இருந்து இக்குழுமத்தின் நிர்வாகக் குழுவில் சேரும் முதல் பெண்மணி மற்றும் இளைய நபர் என்பது தனி சிறப்பு. இவருடைய நியமனத்தின் மூலம் ரிலையன்ஸ்-ன் HR பிரிவு புதிய பொலிவை பெற உள்ளது, இதேபோல் நிர்வாக தலைமைத்துவம் புதிய மாற்றத்தையும், வேகத்தையும் காண உள்ளது.

ரிலையன்ஸ்-க்குள் வந்த ஐரா பிந்த்ரா.. முகேஷ் அம்பானி-யின் ஸ்பெஷல் அறிவிப்பு.. யாரும்மா நீ..?!

முகேஷ் அம்பானி வெளியிட்ட பதிவில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் மக்கள் மற்றும் திறமைக்கான குழுமத் தலைவராக ஐரா பிந்த்ரா நியமிக்கப்பட்டு உள்ளார். ஐரா பிந்திரா என்னுடனும், இஷா, ஆகாஷ் மற்றும் அனந்த் மற்றும் முழு நிர்வாகக் குழுவுடன் நேரடியாக பணியாற்றுவார். மனிதவள மேலாண்மை, நிறுவன கலாச்சாரம் மற்றும் லீடர்ஷிப் மேம்பாடு ஆகிய பகுதிகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் அவர் கவனம் செலுத்துவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அம்பானியின் அறிவிப்பு மேலும், பிந்த்ரா நிறுவனத்தின் வணிக மற்றும் மனிதவளத் தலைவர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றி, ஏற்கனவே உள்ள அடித்தளங்களை மேம்படுத்துவதற்கும், உலகத் தரம் வாய்ந்த மனிதவளம் மற்றும் மக்கள் மேம்பாட்டு நடைமுறைகளை உருவாக்குவதற்கும் ஒத்துழைப்பார் என்று வலியுறுத்தியது.

ஐரா பிந்த்ரா, 1998 இல் டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் பட்டம் பெற்று, பின்னர் 1999 இல் நெதர்லாந்தில் உள்ள மாஸ்ட்ரிச்ட் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். படிப்பை முடித்ததும் மே 2018 இல் மெட்ரானிக்கில் சேருவதற்கு முன்பு GE கேபிடல், GE இந்தியா, GE ஹெல்த்கேர் மற்றும் GE ஆயில் & கேஸ் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+