வரலாற்று சாதனை படைத்த அம்பானி ப்ரோ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகேஷ் அம்பானிக்கு இண்ட்ரோ தேவையா என்ன..? நம் முகேஷ் அம்பானி தான், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வழியாக ஒரு வரலாற்று சாதனையைப் படைத்து இருக்கிறார்.

அப்படி என்ன வரலாற்று சாதனை படைத்துவிட்டார். அவர் செய்த சாதனையை டாடா, பிர்லா போன்ற மற்ற தொழிலதிபர்கள் செய்ய முடியாதா..?

சாதனையை விளக்கிச் சொல்கிறோம் முடிந்தால் அந்த சாதனையை முறி அடிக்கும் நபரைச் சொல்லுங்கள். முடிந்தால் நீங்களே கூட இந்த சாதனையை முறியடியுங்கள் பாஸ்..!

மந்த நிலையை உறுதிப்படுத்தும் TCS..! ஐடி தாதாவுக்கு இந்த நிலையா..?

3 மாதத்தில் இத்தனை கோடியா
 

3 மாதத்தில் இத்தனை கோடியா

இந்தியாவில் கச்சா எண்ணெய் முதல் டெலிகாம் வரை கொடி கட்டிப் பறக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கடந்த 01 அக்டோபர் 2019 முதல் 31 டிசம்பர் 2019 வரையான 3 மாத காலத்தில் மட்டும் 11,640 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டி இருக்கிறதாம்.

சாதனை

சாதனை

இது கடந்த டிசம்பர் 2018-ல் ஈட்டிய நிகர லாபத்தை விட 17.3 சதவிகிதம் அதிகமாம். அதோடு இந்திய தனியார் கம்பெனிகள் வரலாற்றிலேயே, ஒரே காலாண்டில் 11,640 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுவதும் இதுவே முதல் முறை எனவும் கொண்டாடி மகிழ்ந்து கொண்டு இருக்கிறது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.

பழைய ரெக்கார்ட்

பழைய ரெக்கார்ட்

இதற்கு முன், கடந்த 01 ஜூலை 2019 முதல் 30 செப்டம்பர் 2019 வரையான காலாண்டில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 11,262 கோடி ரூபாயை ஈட்டி, இந்திய தனியார் கம்பெனிகளிலேயே ஒரே காலாண்டில் அதிக லாபம் ஈட்டிய கம்பெனி என்கிற சாதனை படைத்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதிக லாபம்
 

அதிக லாபம்

ஆனால் இந்தியாவிலேயே, ஒரே காலாண்டில் அதிக நிகர லாபம் ஈட்டிய கம்பெனி என்கிற பெயரை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் என்கிற அரசு நிறுவனம் தக்க வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் 2013 காலாண்டில் 14,521 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியது ஐ ஓ சி என்பது நினைவு கூறத்தக்கது. மீண்டும் அம்பானியின் சாதனைக்கு வருவோம்.

வருவாய்

வருவாய்

முகேஷ் அம்பானி வழி நடத்திக் கொண்டு இருக்கும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒட்டு மொத்த கன்சாலிடேட்டட் வருவாய் 1.4 சதவிகிதம் சரிந்து இருக்கிறதாம். அதே நேரத்தில் கடந்த ஆறு காலாண்டுகளாக சரிந்து கொண்டு இருந்த கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மார்ஜின்கள் ஓரளவுக்கு தேறி இருக்கிறதாம்.

3 மாதத்தில்

3 மாதத்தில்

மேலே சொன்ன வியாபார வேலைகளுடன், கடந்த டிசம்பர் 2019 காலாண்டில், புதிதாக 415 ரிலையன்ஸ் ரீடெயில் கடைகளை திறந்து இருக்கிறார்களாம். அதோடு ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்கில் கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் 2019 காலத்தில் 3.71 கோடி வாடிக்கையாளர்கள் இணைந்து இருக்கிறார்களாம். எனவே லாபம் டாப் கியரில் பறந்து இருப்பதாகச் சொல்கிறார்கள். இது தான் அம்பானி ப்ரோவின் சாதனை. முடிந்தால் முறியடித்துப் பாருங்களேன்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

mukesh ambani historical high profit on dec 2019 quarter

Mukesh ambani made a historical record by making 11,640 crore net profit in one quarter. This is the highest net profit shown by a indian private company.
Story first published: Saturday, January 18, 2020, 14:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X