அம்பானி குடும்பத்தின் மருமகள்கள், மருமகன்.. யாரு பெஸ்ட்..?!

இந்தியாவின் 2வது பெரிய பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் வாரிசுகளான ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி ஆகியோருக்கும் திருமணம் ஆன நிலையில் அனந்த் அம்பானிக்கு ராதிகா மெர்ச்சன்ட் உடன் திருமணம் நிச்சயமானது.

இவர்களுடைய திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. இந்த நிலையில் அம்பானி குடும்பத்தின் மருமகள்கள், மருமகன் கல்வி, சொத்து மதிப்பு, பதவிகள் என்ன தெரியுமா..?

முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் கணவரான ஆனந்த் பிராமல் மற்றும் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் மனைவியான ஸ்லோகா மேத்தா, கடைக்குட்டி அனந்த் அம்பானியின் வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் நிகர மதிப்பு மற்றும் கல்வித் தகுதிகள் என்ன..? யாரு பெஸ்ட் நீங்களே தொல்லுங்க..?

ராதிகா மெர்ச்சன்ட்

ராதிகா மெர்ச்சன்ட்

ராதிகா மெர்ச்சன்ட் இந்தியாவின் பணக்காரர்களில் ஒருவராகக் கருதப்படும் தொழிலதிபரான வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ஆவார்.

தற்போது தனது தந்தை கட்டுப்பாட்டில் இயங்கும் மருந்து நிறுவனமான என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவிலும், இந்நிறுவனத்தின் இயக்குநராகவும் உள்ளார்.

 

 ராதிகா மெர்ச்சன்ட் சொத்து மதிப்பு

ராதிகா மெர்ச்சன்ட் சொத்து மதிப்பு

வீரேன் மெர்ச்சன்ட்டின் நிகர மதிப்பு சுமார் ரூ.755 கோடி. ஆனால் அவரின் மகளான ராதிகா மெர்ச்சன்ட்டின் நிகர மதிப்பு சுமார் ரூ.10 கோடி மட்டுமே.

ராதிகா மெர்ச்சன்ட் கல்வி

ராதிகா மெர்ச்சன்ட் கல்வி

ராதிகா மெர்ச்சன்ட் தனது பள்ளிப் படிப்பை மும்பையில் உள்ள எகோல் மொண்டியல் வேர்ல்ட் ஸ்கூல் மற்றும் பி.டி சோமானி இன்டர்நேஷனல் ஸ்கூலில் முடித்தார். அவர் பி.டி. சோமானி சர்வதேசப் பள்ளியில் சர்வதேச இளங்கலை பட்டயப் படிப்பைப் பெற்றார். ராதிகா நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

ஸ்லோகா மேத்தா

ஸ்லோகா மேத்தா

முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் மனைவியான ஸ்லோகா மேத்தா திருமணத்தை இந்தியாவே திரும்பி பார்த்தது என்றால் மிகையில்லை.

ஆகாஷ் அம்பானி பல ஆண்டுகளாக ஸ்லோகா மேத்தா-வை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். வைர வியாபாரி ரசல் மேத்தாவின் மகள் தான் ஸ்லோகா மேத்தா அம்பானி. அவர் 2019 இல் ஆகாஷ் அம்பானியை மணந்தார்.

 

ஸ்லோகா மேத்தா சொத்து மதிப்பு

ஸ்லோகா மேத்தா சொத்து மதிப்பு

ஸ்லோகாவின் தந்தை ரஸ்ஸல் மேத்தாவின் நிகரச் சொத்து மதிப்பு 225 மில்லியன் டாலர் (1,822 கோடி ரூபாய்). ஆனால் இவர் வைர வியாபார உலகில் மிகவும் பிரபலமானவர். ஸ்லோகா மேத்தாவின் நிகர மதிப்பு 18 மில்லியன் டாலர்கள் என்று கூறப்படுகிறது. இந்திய ரூபாய் மதிப்பு படி 145 கோடி ரூபாய் ஆகும்.

ஸ்லோகா மேத்தா கல்வி

ஸ்லோகா மேத்தா கல்வி

ஸ்லோகா மேத்தா மும்பையில் உள்ள திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். நியூ ஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் Anthropology பிரிவில் இளங்கலைப் படிப்பை முடித்தார், பின்னர் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் மற்றும் அரசியல் சையின்ஸ் கல்லூரியில் சட்ட பிரிவில் பட்டம் பெற்றார்.

ஆனந்த் பிராமல்

ஆனந்த் பிராமல்

பிரமால் குழுமத்தின் தலைவரும், பிரபல தொழிலதிபரான அஜய் பிரமாலின் மகன் தான் ஆனந்த் பிராமல். முகேஷ் அம்பானியின் ஓரே மகளான ஈஷா அம்பானியை உலகமே வியக்கும் வண்ணம் உதய்பூரில் மணந்தார் ஆனந்த் பிராமல்.

ஆனந்த் பிராமல் பிரமால் குழுமத்தின் நிதிச் சேவை வணிகங்களைக் கவனிப்பதோடு மட்டுமல்லாமல், குழுமத்தின் ரியல் எஸ்டேட் பிரிவான பிராமல் ரியாலிட்டி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். மேலும் ஆனந்த் பிராமல் கிராமப்புற சுகாதாரத்திற்காகப் பிராமல் ஈஸ்வஸ்த்யா என்ற ஸ்டார்ட்அப் நிறுவனர் ஆவார்.

 

ஆனந்த் பிராமல் சொத்து மதிப்பு

ஆனந்த் பிராமல் சொத்து மதிப்பு

ஆனந்த் பிரமாலின் நிகர மதிப்பு குறித்த உறுதியான தகவல் இல்லாவிட்டாலும் அவரது தந்தை அஜய் பிரமாலின் நிகர மதிப்பு சுமார் 25,596 கோடி ரூபாய். இவருக்கு ஒரு மகள், மகன் மட்டுமே.

ஆனந்த் பிராமல் கல்வி

ஆனந்த் பிராமல் கல்வி

ஈஷா அம்பானியின் கணவர் ஆனந்த் பிராமல் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பிரிவில் இளங்கலைப் படிப்பை முடித்தார். ஆனந்த் பிராமல் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+