டாடா நிறுவன பங்குகளை வாங்க திட்டம்போடும் அம்பானி.. இது வேறலெவல் சம்பவமாச்சே..!!

இந்தியாவின் பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி தனது தொலைக்காட்சி, ஓடிடி, பொழுதுபோக்கு பிரிவை மேம்படுத்த பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறார், இதில் முக்கியமான ஒன்று இந்தியாவின் பிரபலமான OTT தளமான டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தை உரிமையாளர் வால்ட் டிஸ்னி இந்தியா உடன் இணைவது தான். இதுகுறித்த பேச்சுவார்த்தை நீண்ட காலமாக நடந்து வரும் வேளையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அடுத்தகட்ட நகர்வை முன்னெடுத்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் - வால்ட் டிஸ்னி மத்தியிலான பேச்சுவார்த்தை உறுதியான நிலையில் டிசம்பர் மாதம் லண்டனில் இரு நிறுவனங்கள் மத்தியிலும் non-binding ஒப்பந்தம் கையெழுத்தாகி, கடந்த வாரத்தில் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் இருப்பதாகத் தகவல் வெளியானது. இதனால் எப்போது வேண்டுமானாலும் இணைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது என முதலீட்டாளர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

டாடா நிறுவன பங்குகளை வாங்க திட்டம்போடும் அம்பானி.. இது வேறலெவல் சம்பவமாச்சே..!!

இந்த நிலையில் அடித்த அதிர்ச்சியாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், வால்ட் டிஸ்னி கட்டுப்பாட்டில் இருக்கும் 29.8 சதவீத டாடா ப்ளே பங்குகளை வாங்குவதற்காகப் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் - டாடா குழுமம் மத்தியில் பல பிரிவுகளில் பெரும் போட்டி இருந்தாலும் முதல் முறையாகப் பங்குகளைக் கைப்பற்றும் அளவுக்கு வந்துள்ளது. ஆனால் டாடா குழும நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது அவ்வளவு எளிதல்ல.

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமாக இருக்கும் டாடா குழுமம் உப்பு முதல் விமானத் தயாரிப்பு வரையில் ஈடுபட்டு வருகிறது, இந்த நிலையில் பொழுதுபோக்குத் துறையில் பல வருடமாக இயங்கி வரும் டாடா ப்ளே நிறுவனப் பங்குகளை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கைப்பற்றத் திட்டமிட்டு வருவதால் லைம்லைட்டுக்கு வருவதோடு, தலைப்பு செய்தியாகவும் மாறியுள்ளது. டாடா ப்ளே டிவி மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையைச் சப்ஸ்கிரிப்ஷன் மாடலில் கொடுத்து வருகிறது.

டாடா ப்ளே நிறுவனத்தில் டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் சுமார் 50.2 சதவீத பங்குகளை வைத்துள்ளது, 29.8 சதவீத பங்குகள் வால்ட் டிஸ்னி-யிடமும், மீதமுள்ள பங்குகள் சிங்கப்பூர் முதலீட்டு நிறுவனமான Temasek-யிடம் உள்ளது. கடந்த வருடம் அக்டோபர் மாதமே Temasek, டாடா ப்ளே பங்குகளை டாடா சன்ஸ்-க்கு விற்கப் பேச்சுவார்த்தை துவங்கியது, ஆனால் எவ்விதமான முடிவும் எட்டப்படவில்லை.

ரிலையன்ஸ், டாடா ப்ளே நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதன் மூலம் தொலைக்காட்சி, OTT தளத்தில் பிரிவில் இருப்பது மட்டும் அல்லாமல் தொலைக்காட்சி டிஸ்ட்ரிபியூஷன் பிரிவிலும் இறங்கும். இதன் மூலம் ஒட்டுமொத்த டிவி எகோசிஸ்டத்திலும் ரிலையன்ஸ் ஆதிக்கம் செலுத்தும். ஜீ எண்டர்டெயின்மென்ட் மற்றும் சோனி மத்தியிலான ஒப்பந்தம் முறிந்த நிலையில் ரிலையன்ஸ் - டிஸ்னி டீல் பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டு உள்ளது.

ஜீ - சோனி இணைந்திருந்தால் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான கூட்டணி உருவாகி இந்தியாவின் அதிக மதிப்புடைய மீடியா நிறுவனமாக உயர்ந்திருக்கும், ஆனால் இனி அந்த வாய்ப்பு ரிலையன்ஸ்-க்கு கிடைத்துள்ளது. ரிலையன்ஸ் - வால்ட் டிஸ்னி இந்தியா இணைந்தால் என்னாகும் தெரியுமா..?

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கீழ் இருக்கும் வாய்காம்18 கூட்டணி மொத்தமாக வால்ட் டிஸ்னி இந்தியா உடன் இணைய உள்ளது. இதன் மூலம் இக்கூட்டணியில் 115 டிவி சேனல்கள் இருக்கும் (ஸ்டார் இந்தியாவின் 77 சேனல்கள், வாய்கம் 18 கீழ் 38 சேனல்), டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமா போன்ற இரு ஸ்ட்ரிமிங் சேனல், 2 லட்சம் மணிநேரத்திற்கான கன்டென்ட் ஆகியவை இக்கூட்டணியில் இருக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+