இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு பெரும்பாலும் அவர்கள் தலைமை தாங்கும் நிறுவனங்களின் பங்கு மதிப்பு அல்லது அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனங்களின் பங்கு மதிப்பு அல்லது அவர்கள் முதலீடு செய்துள்ள நிறவன பங்குகள் மதிப்பின் அடிப்படையில் தான் அமையும்.
பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பில் ரியல் எஸ்டேட், பரம்பரை சொத்துக்கள் ஆகியவை சிறிய அளவிலான பங்கீட்டை மட்டுமே கொண்டு இருக்கும். இந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் இந்திய பங்குச்சந்தையில் ஏற்பட்ட மாற்றங்கள் இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பில் பெரிய அளவிலான உயர்வை பதிவு செய்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு 96.4 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்து இந்தியா மட்டும் அல்லாமல் ஆசியாவின் பெரும் பணக்காரராக உள்ளார். போர்ப்ஸ் பட்டியல் படி 91.2 பில்லியன் டாலர் உடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 13வது இடத்திலும், ப்ளூம்பெர்க் பட்டியல் படி 96.4 பில்லியன் டாலர் உடன் உலகளவில் 11வது இடத்தில் உள்ளார்.
2023 ஆம் நிதியாண்டில் இதுவரையில் சென்செக்ஸ் குறியீடு சுமார் 7.3 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது, இது கட்டாயம் முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு மற்றும் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். இதன் வாயிலாக விரைவில் முகேஷ் அம்பானி டாப் 10 பட்டியலுக்குள் வர வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.
2023 ஆம் ஆண்டில் டாப் 15 பில்லியனர்கள் பட்டியலில் கௌதம் அதானி, டிமார்ட் ராதாகிஷன் தமனி ஆகியோரின் சொத்து மதிப்பு மட்டுமே குறைந்துள்ளது. மற்ற அனைத்து முன்னணி பில்லியனர்களின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. இதில் குறிப்பாக ஜனவரி 1 ஆம் தேதி முதல் ரிலையன்ஸ் பங்குகள் 10 சதவீதம் உயர்ந்துள்ளது, இதுவே முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு உயர முக்கிய காரணமாக உள்ளது.
கடந்த ஆண்டு அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸை காட்டிலும் அதிக சொத்து மதிப்பு வைத்திருந்து கொண்டு உலகின் 2வது பெரும் பணக்காரர் என பெயரையும் பெற்ற கௌதம் அதானி சொத்து மதிப்பு தற்போது வெறும் 63.9 பில்லியன் டாலராக உள்ளது. டிமார்ட் ராதாகிஷன் தமனியின் சொத்து மதிப்பு 2.4 பில்லியன் டாலர் குறைந்துள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications