இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் அனைத்து பிரிவுகளிலும் ஆதிக்கம் செலுத்த துவங்கிய நிலையில், அதற்கான கட்டமைப்பும் மேம்பட்டு, எலக்ட்ரிக் வாகனங்களின் விலை குறைந்தால் இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையே தலைகீழாக மாறிவிடும்.
இந்த நிலையில் Altigreen Propulsion Labs என்னும் எலக்ட்ரிக் சரக்கு வாகனங்களை தயாரிக்கும் நிறுவனம் தனது வாகன உற்பத்தியை அதிகரிக்கவும், புதிய மாடல் வாகனங்களையும் அறிமுகம் செய்யவும் சுமார் 700 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடாக திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் முதலீடு இல்லாமல் தவித்தாலும், போன்பே உட்பட பல டெக் உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள் கடந்த 6 மாத காலத்தில் முதலீட்டை திரட்டியுள்ளது. இதனால் Altigreen Propulsion Labs நிறுவனம் இந்தியாவில் வேகமாக வளரும் எலக்ட்ரிக் கார்கோ வாகன தயாரிப்பில் இருப்பதால் முதலீட்டை எளிதாக திரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Altigreen Propulsion Labs நிறுவனம் 2013 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு வருடத்திற்கு 55000 3 சக்கர எலக்ட்ரிக் சரக்கு வாகனங்களை தயாரித்து வருகிறது. Altigreen Propulsion Labs நிறுவனம் தனது சீரியல் A முதலீட்டு சுற்றில் Sixth Sense Ventures தலைமையில் சுமார் 300 கோடி ரூபாய் அளவிலான தொகை திரட்டப்பட்டது.

சீரியஸ் A சுற்றில் ஆசியாவின் பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி புதிதாக உருவாக்கிய ரிலையன்ஸ் நியூ எனர்ஜி லிமிடெட் நிறுவனம், Xponentia Capital Partners, Momentum Venture Capital மற்றும் Accurant International ஆகிய நிறுவனங்கள் இணைந்து 300 கோடி ரூபாய் முதலீடு செய்தது. இந்த நிலையில் தற்போது சீரியஸ் B சுற்று முதலீட்டு சுற்றுக்கு தயாராகிறது.
முகேஷ் அம்பானி முதலீட்டில் இயங்கும் Altigreen Propulsion Labs சீரியஸ் B சுற்றில் சுமார் 350 மில்லியன் டாலர் முதலீட்டில் 85 மில்லியன் டாலர் அதாவது 700 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை திரட்ட திட்டமிட்டு உள்ளது. இந்த முதலீட்டு சுற்றில் ஏற்கனவே முதலீடு செய்துள்ளவர்கள் மீண்டும் முதலீடு செய்யவும், சில தங்களுடைய பங்குகளை விற்பனை செய்யவும் திட்டமிட்டு உள்ளனர்.


Click it and Unblock the Notifications