இந்தியாவின் 2வது பெரும் பணக்காரர் ஆக இருக்கும் முகேஷ் அம்பானி கச்சா எண்ணெய், பெட்ரோ கெமிக்கல், டெலிகாம் எனப் பல துறையில் பணியாற்றி வந்தாலும் கோடிக் கணக்கான இந்தியர்களைப் போல அவருக்கும் ரியல் எஸ்டேட் மீது பெரிய ஆசை உள்ளது.
ஆனால் இந்த ஆசை அவருடைய பிஸ்னஸ் ப்ரொபைல்-ஐ பாதிக்காத வண்ணம் பார்த்துக்கொள்கிறார்.
மும்பையில் இருக்கும் அன்டிலியா வீடாக இருக்கட்டும், சமீபத்தில் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் வாங்கிய வீடாக இருக்கட்டும், அனைத்துமே பெயர்போனவை அதேபோல் பிரம்மாண்டமானவை.
துபாய்
அந்த வகையில் கச்சா எண்ணெய் வளம் கொட்டிக்கிடக்கும் துபாயில் சில நாட்களுக்கு முன்பு மிகப்பெரிய ரியல் எஸ்டேட் டீல் ஒன்று நடந்தது, இந்தப் பிரம்மாண்ட டீல்-ஐ செய்தது யார் என்ற கேள்வி அனைவருக்கும் இருந்தது, அதற்கான பதில் தான் இப்போது கிடைத்துள்ளது.
ரியல் எஸ்டேட் ஒப்பந்தம்
ஐக்கிய அரபு நாடுகளில் மிகவும் முக்கியமான வர்த்தகம் மற்றும் சுற்றுலா நகரமான துபாயில் இதுவரையில் யாரும் வாங்கிடாத வகையில் மிகப்பெரிய தொகைக்கு ஒரு ரியல் எஸ்டேட் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
முகேஷ் அம்பானி
இந்த ஒப்பந்தம் செய்தது யார் என்ற கேள்விக்குப் பல நாட்களாக விடை தெரியாமல் மக்கள் குழம்பியிருந்த வேளையில் தற்போது விடை கிடைத்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி துபாய் நகரத்தில் சுமார் 80 மில்லியன் டாலர் மதிப்பிலான பீச் சைட் வில்லா வாங்கியுள்ளார்.
Palm Jumeirah வீடு
துபாயின் மிகவும் பிரபலமாக இருக்கும் Palm Jumeirah-வில் இருக்கும் பிரம்மாண்டமான வில்லா ஒன்றை முகேஷ் அம்பானி சுமார் 80 மில்லியன் டாலர் முதலீட்டில் தனது இளைய மகனான அனந்த் அம்பானிக்காக வாங்கியுள்ளார். இந்த ஒப்பந்தம் பல நாட்களாக ரகசியமாக வைக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அனந்த் அம்பானி
செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவு தான் இந்த Palm Jumeirah, தற்போது முகேஷ் அம்பானி தனது மகனுக்காக வாங்கிய ஆடம்பர வில்லா Palm Jumeirah-வின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது ப்ரீமியம் பகுதியாகப் பார்க்கப்படுகிறது.
10 பெட்ரூம்
இந்தப் பிரம்மாண்ட வீட்டில் 10 பெட்ரூம், ப்ரைவேட் ஸ்பா, வீட்டுக்குள் மற்றும் வீட்டுக்கு வெளியில் ஸ்விமிங் பூல் உட்படப் பல ஆடம்பரமான விஷயங்கள் இந்த வீட்டில் அமைந்துள்ளது. ஆடம்பரத்திற்குப் பெயர்போன முகேஷ் அம்பானி இந்த வீட்டை எப்படி எல்லாம் மாற்றப்போகிறாரோ..?
உலகப் பணக்காரர்களின் கூடாரம்
துபாய் தற்போது உலகப் பணக்காரர்களின் கூடாரமாக மாறி வருகிறது என்றால் மிகையில்லை, துபாய் அரசு உலக நாடுகளில் இருக்கும் பிரபலங்கள், தொழிலதிபர்கள், பணக்காரர்கள் எனப் பலருக்கும் கோல்டன் விசா-வை தேடி தேடி அளித்து வருகிறது. இது மட்டும் அல்லாமல் சமீபத்தில் வெளிநாட்டவர்களுக்காக ரியல் எஸ்டேட் விதிமுறைகளில் பெரிய அளவிலான தளர்வுகள் அளிக்கப்பட்டது.
பிரபலங்கள்
இதே Palm Jumeirah-வில் பிரிட்டன் புட்பால் விளையாட்டு வீரர் டேவிட் பெக்கம், பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் ஆகியோரும் வீட்டை வாங்கியுள்ளனர். இதன் மூலம் இவர்களுடன் தற்போது அனந்த் அம்பானியும் வசிக்கப் போகிறார்.
More From GoodReturns

Dubai: தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்.. துபாயில் மட்டும் ஏன் இப்படி..?

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

துபாய் வாழ் இந்தியர்களே உஷார்!! 2 வருஷம் ஜெயில்!! ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் அரசு எச்சரிக்கை!!

துபாய் விமான நிலையத்தில் விபத்து..? எமிரேட்ஸ் சொன்ன குட் நியூஸ்..!! இந்தியர்கள் ஹேப்பி..!!

துபாய் வாழ் இந்தியர்களே வீட்டை விட்டு வெளியேறினால் நடவடிக்கை: ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் எச்சரிக்கை

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!



Click it and Unblock the Notifications