அதானி குழுமம் கடந்த 4 வருடத்தில் பல துறையில் வர்த்தக விரிவாக்கம், முதலீடு எனப் பிரம்மாண்டமாக வளர்ச்சி அடைந்த நிலையில் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 115 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்தது மட்டும் அல்லாமல் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் இதுவரையில் எந்த ஒரு இந்தியரும் தொட்டிடாத இடமான 3வது இடத்தைத் தொட்டுச் சாதனை படைத்தார்.
இதேவேளையில் பல ஆண்டுகளாக இந்தியா மட்டும் அல்லாமல் ஆசியாவின் பெரும் பணக்காரராக இருந்த முகேஷ் அம்பானியை பின்னுக்குத்தள்ளிக் கிட்டத்தட்ட 1 வருடமாக கௌதம் ஆதானி முதல் இடத்தில் இருந்தார்.
ஹிண்டன்பர்க் ரிசர்ச்
இந்த நிலையில் தான் அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பு 32000 வார்த்தைகளைக் கொண்ட அறிக்கையைச் சரியாக அதானி எண்டர்பிரைஸ் நிறுவனத்தின் FPO வெளியாகும் போது வெளியிட்ட காரணத்தால் அதானி குழுமத்திற்கான பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது.
100 பில்லியன் டாலர்
ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் அறிக்கை வெளியானதில் இருந்து இன்று வரையில் அதானி குழுமம் ஒட்டுமொத்த சந்தை மூலதன மதிப்பில் சுமார் 100 பில்லியன் டாலரை இழந்துள்ளது. இதேபோல் தொடர்ந்து 6வது நாளாக அதானி குழும பங்குகள் சரிந்து வருகிறது.
44 பில்லியன் டாலர் இழப்பு
இதன் எதிரொலியாகக் கடந்த ஒரு வாரத்தில் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 44 பில்லியன் டாலர் சரிந்தது. இது மட்டும் அல்லாமல் கடந்த 24 மணிநேரத்தில் கௌதம் அதானி 23.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை இழந்துள்ளார். இதன் மூலம் போர்ப்ஸ் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 65.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 16வது இடத்திற்குத் தள்ளப்பட்டார் கௌதம் அதானி.
டாடா, ரிலையன்ஸ்
மறுமுனையில் இந்தியாவின் அதிக மதிப்புடைய வர்த்தகச் சாம்ராஜ்ஜியம் என்ற பெயரை மீண்டும் டாடா குழுமம் பெற்றுள்ளது, இதேபோல் மீண்டும் ஆசியாவின் பெரும் பணக்காரர் பட்டத்தைப் பெற்றார் முகேஷ் அம்பானி.
முகேஷ் அம்பானி
போர்ப்ஸ் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 82.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 10வது இடத்தில் உள்ளார் முகேஷ் அம்பானி. கடந்த வாரம் 9வது இடத்தில் இருந்த முகேஷ் அம்பானிக்கு இந்தப் பங்குச்சந்தையில் ஏற்பட்ட பாதிப்பு முகேஷ் அம்பானி சொத்து மதிப்பையும் பாதித்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இன்றைய வர்த்தகத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 0.39 சதவீதம் சரிந்து 2,329.00 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. கடந்த 5 நாளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 0.62 சதவீதம் சரிந்திருந்தது.
ஜனவரி 25 முதல் பிப்ரவரி 1 (5 வர்த்தக நாள்)
அதானி எண்டர்பிரைசஸ் - 37 சதவீதம் சரிவு
அதானி போர்ட்ஸ் - 35 சதவீதம் சரிவு
அதானி பவர் - 22.81 சதவீதம் சரிவு
அதானி டிரான்ஸ்மிஷன் - 37.61 சதவீதம் சரிவு
அதானி கிரீன் எனர்ஜி - 39.78 சதவீதம் சரிவு
அதானி டோட்டல் கேஸ் - 51.24 சதவீதம் சரிவு
அதானி வில்மார் - 22.64 சதவீதம் சரிவு
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications