இந்திய ரீடைல் சந்தையில் முடிசூடா மன்னனாக விளங்கிய பியூச்சர் ரீடைல் இன்று இடம் தெரியாத அளவுக்கு மாயமாகியுள்ளது, இந்த மாபெரும் வீழ்ச்சிக்கு முக்கியமான காரணம் கடன் மட்டுமே. இந்தியாவில் பெரும் ரீடைல் வர்த்தக கனவுடன் இருக்கும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடைல், பியூச்சர் குரூப்-ஐ வாங்க திட்டமிட்ட நிலையிலும் அமேசான் போட்ட வழக்கின் காரணமாக தோல்வியில் முடிந்தது.
ரிலையன்ஸ் ரீடைல், பியூச்சர் குரூப், அமேசான் வழக்குகள் மத்தியில் ரிலையன்ஸ் தனது சொந்த முதலீட்டை வைத்து பியூச்சர் குரூப்-ஐ நிர்வாகம் செய்தது. இதற்கிடையில் ரீடைல் கடைகளின் குத்தகை ஒப்பந்தத்தை புதுப்பிக்க முடியாத நிலையில் அதிகளவிலான கடைகளை ரிலையன்ஸ் கைப்பற்றியது.

இதற்கு மத்தியில் ரிலையன்ஸ் ரீடைல், பியூச்சர் குரூப்-ஐ கைப்பற்றும் திட்டத்தில் இருந்து வெளியேறியது. அதை தொடர்ந்து கிஷோர் பியானி தலைமையிலான பியூச்சர் குரூப் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தால் திவாலாக அறிவிக்கப்பட்டு, இந்நிறுவனத்தின் சொத்துக்களுக்கு தீர்வு காண முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் பியூச்சர் குரூப்-ன் எஞ்சியுள்ள சொத்துக்கள் மற்றும் வர்த்தகதையும் கைப்பற்ற வேண்டும் என ரிலையன்ஸ் ரீடைல் திட்டமிட்டு பிட்டிங் செய்து தீர்வுக்கான விண்ணப்பத்தை தொடுத்துள்ளது. பியூச்சர் குரூப்-ன் எஞ்சியுள்ள சொத்துக்களுக்காக ஜின்டால் குரூப், GBTL ஆகிய நிறுவனங்களும் விண்ணப்பம் செய்துள்ளது.
பியூச்சர் குரூப் தற்போது 12,265 கோடி ரூபாய் அளவிலான தொகையை நிலுவையில் வைத்துள்ளது, மேலும் வைப்பு கணக்குகளிடம் 23 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளது. பியூச்சர் குரூப்-க்கு தீர்வு காணும் வகையில் resolution professional ஆக நியமிக்கப்பட்டு உள்ள Avil Menezes 3 நிறுவனங்கள் போட்டிப்போடுவதாக அறிவித்துள்ளார்.
பியூச்சர் குரூப் நிறுவனத்தை எப்படியாவது அடைவேன் என பிடிவாதத்துடன் முகேஷ் அம்பானி உள்ளார், இதன் காரணமாகவே பல மாத சட்ட போராட்டத்திற்கு பின்பு திவாலான பின்பும் எஞ்சியுள்ள சொத்துக்கள் மற்றும் வர்த்தகத்தையும் கைப்பற்ற வேண்டும் என இலக்குடன் பிட்டிங் செய்த வருகிறார்.


Click it and Unblock the Notifications