முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்திற்கு இன்று மிகவும் முக்கியமான நாள், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் நிதி சேவை பிரிவான ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தைத் தனியாகப் பிரித்து ஒரு பங்கு விலை 261 ரூபாய் விலையில் கிட்டதட்ட 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனத்தை மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ளது.
முகேஷ் அம்பானியின் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் நிதி சேவை பிரிவில் பெரும் மாற்றத்தையும், மிகப்பெரிய வர்த்தகத்தையும் பெற வேண்டும் என்பதை முக்கிய இலக்காகக் கொண்டு உள்ளது. அதிலும் குறிப்பாக நுகர்வோர் பொருட்கள், ஆன்லைன் கடன் சேவையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற முக்கிய கனவுடன் வந்துள்ளது.

இதனால் இத்துறையில் இருக்கும் பல முன்னணி நிறுவனங்களுக்கும், சிறிய நிறுவனங்களுக்கும் வயிற்றில் புளியைக் கரைக்கத் துவங்கியுள்ளது. காரணம் முகேஷ் அம்பானியின் அதிரடி ஆட்டம் தான், ஜியோ டெலிகாம் சேவை துவங்கிய போதும் சரி, ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தகத்திலும், சமீபத்தில் campa குளிர்பானங்களை அறிமுகம் செய்யும் போதும் சரி குறைவான விலையில் பொருட்களையும், சேவைகளையும் கொடுத்துக் குறுகிய காலத்தில் அதிகப்படியான வர்த்தகம், வாடிக்கையாளர்களைப் பெற்றுவிடுவார்.
இதற்கு சரியான உதாரணம் ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் சேவை தான், டெலிகாம் சேவையில் எவ்விதமான முன் அனுபவம் இல்லாமல் 4ஜி சேவை அறிமுகம் செய்தது மட்டும் அல்லாமல் பல்வேறு இலவசமான சேவைகள், மலிவான சேவைகள் மூலம் வெறும் 4 வருடத்தில் டாப் நிறுவனமாக உயர்ந்தது.
இதே காலகட்டத்தில் ஜியோ டெலிகாம் சேவை அறிமுகத்திற்குப் பின்பு வோடாபோன், ஏர்செல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் என பல டெலிகாம் நிறுவனங்கள் மாயமானது நினைவிருக்கும். இதேபோல் தான் தற்போது முகேஷ் அம்பானி ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் மூலம் இந்தியாவின் பின்டெக் துறையை தலைகீழாகப் புரட்டிப்போட உள்ளது என பல சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்திற்கு தற்போது சாதகமாகக் கோடிக்கணக்கான ரிலையன்ஸ் ஜியோவின் டெலிகாம் வாடிக்கையாளர்களும், இந்தியா முழுவதும் இருக்கும் ரிலையன்ஸ் ரீடைல் கடைகளும் தனது நிதி சேவையை விரிவாகம் செய்ய சிறப்பான தளமாக உள்ளது.
மேலும் தங்களிடம் இருக்கும் டேட்டா வைத்து ஜியோ ஆப் வாயிலாகப் பல கோடி வாடிக்கையாளர்களைக் குறைவான வட்டியில் கடன் கொடுத்து ஈர்க்க முடியும். இதுமட்டும் அல்லாமல் வாங்கிய கடனை தங்களின் நிறுவனத்திலேயே செலவு செய்ய வைக்க முடியும்.
ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் ரிலையன்ஸ் ரீடைல் மூலம் B2C வர்த்தகத்தைப் பெறுவதோடு, ரிலையன்ஸ் மார்கெட் சமீபத்தில் கைப்பற்றப்பட்ட மெட்ரோ ஆகியவற்றின் மூலம் B2B வர்த்தகத்தைப் பெற முடியும்.
ஜியோ 2015ல் பேமெண்ட் பேங்க் லைசென்ஸ் பெற்றது, 2019ல் பேமெண்ட் டெர்மினல் பிஸ்னஸ் துவங்கியதன் மூலம் PoS இயந்திரங்களை விற்பனையாளர்களுக்கு விநியோகம் செய்தது. ஜனவரி 2020ல் UPI பேமெண்ட் தளமான MyJio ஆப் அறிமுகம் செய்யப்பட்டது. இதை அனைத்தையும் மெட்டா உடனான கூட்டணி மூலம் வாட்ஸ்அப் மூலம் இணைக்கப்பட்டது.
இப்படி பேமெண்ட் மற்றும் டிஜிட்டல் நிதி சேவை கட்டமைப்பில் 360 கோணத்திலும் வர்த்தகம் செய்யும் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் தனியாகப் பிரித்து பங்குச்சந்தையில் கிட்டதட்ட 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மதிப்புடன் பட்டியலிடுவதன் மூலம் பெரும் மாற்றத்தை நிதி சேவை துறையில் செய்ய முடியும். இதன் மூலம் பல சிறிய பின்டெக், ஆன்லைன் கடன் சேவை நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications