ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் இன்று பங்குச்சந்தையில் பட்டியலிட்டு பெரும் சாதனை படைத்திருக்கும் வேளையில், ஐபிஓ விலையைக் காட்டிலும் சுமார் 21.4 சதவீதம் அதிகமான விலையில் பட்டியலிட்டு 12.6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.
இதுமட்டும் அல்லாமல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு அதிக பின் அதிக மதிப்புடைய இந்திய நிறுவனம் என்ற சாதனையைப் பெற்றுள்ளது.

ஆனால் இதோடு நிற்கவில்லை, ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ வெளியீட்டின்போதே 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான பங்கு மதிப்பீட்டைப் பெற்ற நிறுவனங்களின் பட்டியலில் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் இணைந்துள்ளது.
இதன் மூலம் உலகளாவிய நிறுவனங்களான Meta, Alibaba, SpaceX போன்ற நிறுவனர்கள் தலைமையிலான நிறுவனங்களில் அதிக மதிப்பீட்டைப் பெற்ற நிறுவனங்கள் வரிசையிலும் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸும் இடம்பிடித்து பெரும் சாதனை படைத்துள்ளது.
பொதுவாக ஒரு நிறுவனர் தலைமையில் நிறுவனம் வேகமாக வளர்ந்தாலும், அதன் வளர்ச்சிப் பாதையில் தினசரி நிர்வாக பணிகளைக் கூர்ந்து கவனிக்க நிறுவனர் அல்லாத சிஇஓ நியமிக்கப்படுவார்.
ஆனால் நிறுவனர் தலைமையிலேயே 100 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டை பெறுவது என்பது அரிது. அப்படி முகேஷ் அம்பானி துவங்கிய ஜியோ நிறுவனத்தின் மதிப்பு அவர் தலைமையிலேயே 100 பில்லியன் டாலர் அளவீட்டைத் தொட்டு உள்ளது.
இன்று வர்த்தகம் முடியும் வேளையில் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் பங்குகள் பட்டியலிட்ட பிறகு சுமார் 4.52 சதவீதம் உயர்ந்து ஒரே நாளில் 26.85 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஜியோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு என்பது 13.05 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் இந்தியாவில் அதிக சந்தை மதிப்பீட்டு கொண்டு நிறுவனங்கள் பட்டியலில் ஏர்டெல் 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளது. முதல் இடத்தில் ரிலையன்ஸ் 15.6 லட்சம் கோடி ரூபாய் அளவிலும், 2வது இடத்தில் 13.04 லட்சம் கோடி ரூபாய் அளவிலும் ஜியோவும் உள்ளது.
அடுத்தாக இன்று பட்டியலிடப்பட்ட ஜியோ நிறுவனத்திற்கு நோமுரா, மோதிலால் ஆஸ்வால், எல்ரா கேப்பிடல் ஆகியவை Buy ரேட்டிங் கொடுத்து முதலீட்டாளர்கள் மத்தியில் அதிரடியை உருவாக்கியது. இதனால் பட்டியலிட்ட பின்பு ஐபிஓ விலையான 1119 ரூபாயில் இருந்த 1,423.80 ரூபாய் வரையில் உயர்ந்து அசத்தியது.


Click it and Unblock the Notifications