இந்திய மீடியா துறையில் பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்தி வரும் டிஸ்னி நிறுவனம், ரியலைன்ஸ் நிறுவனத்துடன் இணைய, தனது மதிப்பை ஐந்தில் ஒரு பங்காகக் குறைத்துள்ளது எத்தனை பேருக்குத் தெரியும்.
ரியலைன்ஸ் வயாகாம்18 மற்றும் டிஸ்னி இந்தியா கூட்டணி தற்போது, 8.5 பில்லியன் டாலருக்கு மதிப்பிடப்பட்டு உள்ளது. மட்டும் அல்லாமல் இந்த கூட்டணி நிறுவனம் இந்திய மீடியா மற்றும் ஸ்ட்ரீமிங் துறையில் பெரும் ஆதிக்கத்தை பெரும் என கணிக்கப்பட்டு உள்ளது.

வயாகாம்18 மற்றும் டிஸ்னி இந்தியா கூட்டணி உருவாக்க ஒப்பந்தம் செய்துள்ள வேளையில் டிஸ்னி தனது மதிப்பீட்டை 5ல் ஒரு பகுதிக்கு முகேஷ் அம்பானியிடம் விற்கிறது.
இந்த கூட்டு நிறுவனம், இந்தியாவின் மிகப்பெரிய ஊடக நிறுவனமாக இருப்பதோடு, 120 தொலைக்காட்சி சேனல்கள், இரண்டு ஸ்ட்ரீமிங் தளங்கள் மற்றும் இந்தியாவில் முக்கிய கிரிக்கெட் போட்டிகளுக்கான தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமைகளைக் கொண்டிருக்கும்.
சரி, டிஸ்னி இந்தியாவின் மதிப்பு ஏன் குறைக்கப்பட்டது..? இதைப் புரிந்துகொள்ள, ஒரு குட்டி பிளாஷ்பேக் கதை தெரிந்து கொள்ள வேண்டும். 2019 ஆம் ஆண்டில், டிஸ்னி நிறுவனம் அமெரிக்க ஊடக தொழிலதிபரான ருபர்ட் முர்டோக்-யிடமிருந்து 21st Century Fox நிறுவனத்தை வாங்கியது.
அப்போது, 21st Century Fox நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகள் அனைத்தும் ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் கீழ் இருந்தன. இந்த பரிவர்த்தனையில் ஸ்டார் இந்தியாவின் மதிப்பு சுமார் 15 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த பரிவர்த்தனைக்குப் பின்னர் டிஸ்னி நிறுவனத்தின் இந்திய பிரிவாக இருந்த டிஸ்னி சொத்துகள் மற்றும் ஸ்டார் இந்தியாவின் சொத்துகள் உடன் இணைக்கப்பட்டு டிஸ்னி ஸ்டார் ஆக மாறியது. ஸ்டார் இந்தியா மட்டுமே 15 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்ட நிலையில், டிஸ்னி சொத்துக்களும் சேர்க்கப்பட்டது.
இங்க கட் செய்தால் நிகழ்காலத்திற்கு வருவோம், பல மாத பேச்சுவார்த்தைக்குப் பின்பு வயாகாம்18 மற்றும் டிஸ்னி இந்தியா கூட்டணி நிறுவனத்தை உருவாக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த இணைப்பு நிறுவனத்தின் மதிப்பு 8.5 பில்லியன் டாலராக உள்ளது. இங்கேயே நீங்க ஷாக் ஆகலாம், இதைவிட முக்கியமான விஷயம் உள்ளது.
இந்த கூட்டணி நிறுவனத்தில் ரியலைன்ஸ் 16.34% பங்குகளையும், அதன் துணை நிறுவனமான வயாகாம்18 46.82% பங்குகளையும் வைத்திருக்கும். மீதமுள்ள 36.84% பங்குகளை டிஸ்னி நிறுவனம் வைத்திருக்கிறது. இந்த 36.84% பங்குகளின் மதிப்பு வெறும் 3 பில்லியன் டாலர் மட்டுமே.
அதாவது, டிஸ்னி நிறுவனம் ஸ்டார் இந்தியாவை வாங்கும் போது 15 பில்லியன் டாலருக்கு மதிப்பிடப்பட்ட இந்த சொத்து வெறும் 5 வருடத்தில் 5ல் ஒரு பங்கு விலைக்கு விற்கப்பட்டு உள்ளது. உண்மையில் டிஸ்னி ஏன் இந்த மதிப்பீட்டுக்கு ஒப்பந்தம் செய்தது?
அதற்கான அதிகாரப்பூர்வ காரணம் தெரியவில்லை என்றாலும், டிஸ்னி நிறுவனம் தனது உலகளாவிய வர்த்தகத்தில் பெரும் இழப்பை எதிர்கொண்டு இருக்கும் வேளையில், இந்தியாவிலிருந்து வெளியேற முடிவு செய்துவிட்டது.
உலகளவில் டிஸ்னி நிறுவனம் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதால், அமெரிக்கா மற்றும் பிற முக்கிய சந்தைகளில் கவனம் செலுத்த இந்திய சந்தையை விட்டு விலக முடிவு செய்து, நிர்வாகத்தையும், பொறுப்புகளையும் குறைவான தொகைக்கு முகேஷ் அம்பானியிடம் ஒப்படைத்துவிட்டது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications