இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி தனது ஆசை காதல் மனைவியைத் துரத்தித் துரத்தி காதல் செய்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணமாகி 39 வருடமாகியும் நீதா அம்பானி மீதான காதல் முகேஷ் அம்பானிக்கு சற்றும் குறையவில்லை என்பது பெரும் தொழிலதிபர்கள் மட்டும் அல்லாமல் இன்றைய தலைமுறையினரும் பார்த்து வியக்கும் விஷயமாகும்.

நீதா அம்பானியின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் மொத்த அம்பானி குடும்பமும் வியக்கும் வண்ணம் பார்ட்டி, கிப்ட் கொடுத்து அசத்துவதைத் தவறாமல் செய்து வருகிறார் முகேஷ் அம்பானி.
ஆனால் இருவருக்கும் மத்தியில் பகிரப்படும் கிப்ட் எல்லாம் பெரிய விஷயமே இல்லை, ஒவ்வொரு முறையும் வெளியில் வரும் போது முகேஷ் அம்பானி நீதா அம்பானி பாதுகாப்பு மற்றும் கம்ஃபர்ட்டில் எடுத்துக்கொள்ளும் அக்கறை ஒவ்வொரு முறையும் தெரிகிறது. இவை அனைத்திற்கும் உச்சம் தான் முகேஷ் அம்பானி பல ஆயிரம் பேருக்கு முன்பு பொதுவெளியில் நீதா அம்பானியை கிஸ் அடித்த விஷயம்.
இந்திய வர்த்தக உலகில் மிகவும் சக்திவாய்ந்த ஜோடியாக இருப்பவர்கள் முகேஷ் - நீதா அம்பானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகக் குழு பதவி, ரிலையன்ஸ் பவுண்டேஷன், ஜியோ கல்சுரல் சென்டர், ஜியோ பிளாசா ஆகியவற்றில் நெருங்கி பணியாற்றியது மூலம் நீதா அம்பானி வர்த்தகத் துறையில் முக்கிய நபராக உள்ளார்.
ஆகாஷ் அம்பானி - ஸ்லோகா மேத்தா திருமண விழாவில் Aye Meri Zohra Jabeen என்ற பாடலை பாடி நீதா அம்பானிக்கு பல ஆயிரம் பேர் முன்னிலையில் முத்தம் கொடுத்தார் முகேஷ் அம்பானி. இது பழைய வீடியோவாக இருந்தாலும் சமீபத்தில் இருவரும் குடும்பத்துடன் ராமர் கோயிலுக்கு வந்த நிலையில், பழைய வீடியோ மீண்டும் டிரெண்டானது.
அம்பானி குடும்பத்தில் அடுத்த முக்கிய விழாவாக மார்ச் 1 ஆம் தேதி அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சன்ட் ஆகியோருக்கு குஜராத் ஜாம்நகரில் திருமணம் நடக்க உள்ளது. இந்த விழாவுக்கான அழைப்பு இந்தியா முழுவதும் இருக்கும் முக்கியத் தலைவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications