இந்தியாவில் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் சந்தையில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை உடைக்கும் இலக்காக கொண்டு, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் "Wyzr" என்ற புதிய பிராண்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் ஒரு ஸ்வதேசி பிராண்டாக உருவெடுத்துள்ளது.

ரிலையன்ஸ் ரீடைல் பிரிவு தற்போது Wyzr பிராண்டின் கீழ் ஏர் கூலரை அறிமுகப்படுத்தியுள்ளது. சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் சரியான பிஸ்னஸ் ஐடியா உடன் முகேஷ் அம்பானி களமிறங்கியுள்ளார். இது வெற்றி அடையும் பட்சத்தில் அடுத்தடுத்து பல பொருட்களை அறிமுகம் செய்யும் இலக்குடன் ரிலையன்ஸ் குழுமம் உள்ளது.
Wyzr பிராண்டின் கீழ் ஏர் கூலரை தொடர்ந்து விரைவில் தொலைக்காட்சிகள், வாஷிங் மெஷின், பிரிட்ஜ், ஏர் கண்டிஷனர்கள், சிறிய மின்சாரக் கருவிகள் மற்றும் LED பல்புகள் ஆகியவை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு மாற்றாக, ஸ்வதேச பிராண்டை உருவாக்கும் முயற்சியில் முகேஷ் அம்பானி நீண்ட காலமாக இருந்து வருகிறார். இந்நிறுவனம் தயாரிப்புகளை சொந்தமாக வடிவமைத்து உருவாக்க திட்டமிட்டுள்ளது.
ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் 4வது காலாண்டின் லாப அறிக்கை கூட்டத்தில், ரிலையன்ஸ் ரீடைல் நிதித் தலைமை அதிகாரி தினேஷ் தலுஜா இந்த புதிய பிராண்ட்டின் அறிமுகம் பற்றி குறிப்பிட்டிருந்தார்.
Wyzr பிராண்ட், வீட்டு உபயோகப் பொருட்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் LG, சாம்சங் மற்றும் விர்ல்பூல் போன்ற பிராண்டுகளின் தயாரிப்புகளை விட மலிவாக இருக்கும். டாடா நிறுவனத்தின் வோல்டாஸ் நிறுவனம் ஏர் கண்டிஷனர் பிரிவில் முன்னணியில் இருந்தாலும், LG மற்றும் டைக்கின் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் சந்தை பங்கீடு மிகவும் நெருங்கிய அளவில் தான் உள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications