ஜியோ-வில் இப்படியொரு திட்டமா.. அன்லிமிடெட் 5ஜி டேட்டா.. அடிதூள்..!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் மிகப்பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டராக உள்ளது. மேலும் இந்தியர்கள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தும் விதத்தில் மிகப் பெரிய புரட்சியை ஜியோ நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியால் நடத்தப்படும் ரிலையன்ஸ் ஜியோதான் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம். இந்தியா முழுவதும் ஜியோ நிறுவனம் அதன் நெட்வொர்க்கை விரிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் தற்போது நாட்டில் உள்ள அனைவருக்கும் எளிதில் இன்டர்நெட் வசதி கிடைக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஜூலை மாதம் அதன் அனைத்து ப்ரீபெய்ட் திட்டங்களின் விலைகளை உயர்த்துவதாக அறிவித்தது. மேலும் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் பிற பிரபலமான OTT சேவைகளுக்கான பயனர்களின் எண்ணிக்கையில் சில மாற்றங்களை செய்தது. ஜியோ நிறுவனம் மட்டுமின்றி வோடபோன் ஐடியா, ஏர்டெல் போன்ற பிரபலமான நிறுவனங்களும் ரீசார்ஜ் கட்டண உயர்வை அறிவித்தன. இதனால் பல பயனர்கள் ஜியோவில் இருந்து BSNL-க்கு மாறத் தொடங்கினர். அதன் பிறகு ஜியோ பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியது. அந்த வரிசையில் தற்போது மீண்டும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

 ஜியோ-வில் இப்படியொரு திட்டமா.. அன்லிமிடெட் 5ஜி டேட்டா.. அடிதூள்..!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது புதிய 98 நாள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அன்லிமிடெட் 5G டேட்டா மற்றும் கால் வசதியை ரூ.999 என்ற விலையில் வழங்குகிறது மற்றும் 98 நாட்கள் வரை செல்லுபடியாகும். இந்த திட்டம் ஒரு நாளைக்கு 2ஜிபி அதிவேக 4ஜி டேட்டாவை வழங்குகிறது. பயனர்கள் அன்லிமிடெட் 5G டேட்டாவைப் பெறுவார்கள். இருப்பினும் இந்த நன்மையைப் பெற, வாடிக்கையாளர்கள் 5G ஸ்மார்ட்போன் வைத்திருக்க வேண்டும் மற்றும் 5G நெட்வொர்க் கவரேஜ் உள்ள பகுதியில் இருக்க வேண்டும்.

இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் 100 இலவச எஸ்எம்எஸ், அன்லிமிடெட் கால் வசதிகள், நாடு முழுவதும் இலவச ரோமிங் ஆகியவற்றைப் பெறுவார்கள். கூடுதலாக, ஜியோ வாடிக்கையாளர்கள் ஜியோ கிளவுட், ஜியோ சினிமா, ஜியோ டிவி ஆகியவற்றிற்கான சந்தாக்களையும் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ வாடிக்கையாளர்கள் 98 நாள் திட்டத்திற்கு MyJio ஆப், ஜியோவின் இணையதளம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர் மூலம் எளிதாக ரீசார்ஜ் செய்யலாம். தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய பிளானுக்கு மக்களின் வரவேற்பு அதிகரிக்குமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+