மும்பை: ரிலையன்ஸ் நிறுவனம் தங்களுடைய ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் வாயிலாக புதிதாக ஜியோ பைனான்ஸ் என்ற ஒரு செயலியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் மற்றும் ஐஓஎஸ் பயன்பாட்டாளர்கள் ஜியோ பைனான்ஸ் செயலியை பயன்படுத்தலாம் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜியோ பைனான்ஸ் செயலி கடந்த மே மாதம் 30 ஆம் தேதியே பீட்டா வெர்ஷனில் வாடிக்கையாளர்களுக்கு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

அப்போது 60 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்த செயலியை பயன்படுத்தி தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் அதிகாரப்பூர்வமாக அனைத்து ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர்களுக்கும் ஜியோ பைனான்ஸ் செயலி தற்போது பிளே ஸ்டோர் வாயிலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த செயலியில் கடன் வாங்குவது, மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்வது, வீட்டு கடன்களை பெறுவது, சொத்துக்களை அடமானம் வைத்து கடன் பெறுவது என அனைத்து வகையான நிதி சேவைகளையும் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டும் இன்றி ஜியோ பைனான்ஸ் செயலி வாயிலாக டிஜிட்டல் முறையில் ஒரு சேமிப்பு கணக்கையும் தொடங்க முடியும். இதில் பயோமெட்ரிக் அடையாள சரி பார்ப்பு, டெபிட் கார்டுகள் உள்ளிட்டவையும் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
5 நிமிடங்களிலேயே ஒருவரால் ஜியோ பைனான்ஸ் செயலி வாயிலாக டிஜிட்டல் கணக்கினை துவங்கிட முடியும் என ஜியோ பைனான்ஸ் தெரிவித்துள்ளது. யுபிஐ பேமென்ட், மொபைல் ரீசார்ஜ் மற்றும் பிற கட்டணங்களை செலுத்துவது உள்ளிட்ட அனைத்து நிதி சார்ந்த அம்சங்களும் இந்த செயலியில் இருக்கிறது.
பல்வேறு வங்கி கணக்குகளை இந்த செயலியுடன் இணைத்து விட்டால் எந்த வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருப்பு இருக்கிறது, என்னென்ன மியூச்சுவல் ஃபண்டுகளில் எல்லாம் பணம் சேமித்து வைத்திருக்கிறார்கள் என்பன உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இந்த ஒரு செயலி வாயிலாகவே தெரிந்து கொள்ள முடியும். அது மட்டும் இன்றி ஜியோ பைனான்ஸ் செயலி வாயிலாக 24 காப்பீடு திட்டங்களையும் பெற்றுக்கொள்ள முடியும். ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு மற்றும் வாகன காப்பீடுகளை டிஜிட்டல் முறையிலேயே பெற்றுக் கொள்ளலாம் என ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனம் ப்ளாக் ராக் என்ற புகழ்பெற்ற அமெரிக்க முதலீட்டு நிறுவனத்தோடு இணைந்து செயல்பட இருப்பதால் கூடிய விரைவில் பல்வேறு முதலீடு திட்டங்களும் இந்த செயலியின் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவான ஒரு செயலி ஜியோ பைனான்ஸ் என அதன் தலைமை செயல் அதிகாரியான ஹித்தேஷ் சேத்தியா தெரிவித்துள்ளார் .கோடிக்கணக்கான இந்திய மக்களின் நம்பிக்கையான நிதி செயலியாக இது இருக்கும் என அவர் கூறியுள்ளார். தற்போது இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் மை ஜியோ ஆகியவற்றின் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Written by: Devika
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!



Click it and Unblock the Notifications