இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பெரும் கனவுடன் தனது நிதியியல் சேவை பிரிவைத் தனியாகப் பிரித்து ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிட்டது.
இந்த நிறுவனத்தின் முக்கிய இலக்கே அதிகப்படியான கன்ஸ்யூமர் லோன் கொடுத்து பெரிய அளவிலான வர்த்தகத்தை இப்பிரிவில் பெற வேண்டும் என்பது தான். இதனால் இத்துறையில் கில்லியாக இருக்கும் பஜாஜ் பைனான்ஸ் பெரும் சோகத்தில் இருந்தது..

ஆனால் ஆர்பிஐ வெளியிட்ட ஒரு அறிவிப்பால் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் மொத்த வர்த்தகத்தையும் தலைகீழாக மாற்றியுள்ளது மட்டும் அல்லாமல் புதிய வர்த்தகத்திற்குள் நுழைந்துள்ளது. பாதுகாப்பற்ற கடன்களை வழங்கும் திட்டத்துடன் ஜியோ பைனான்சியல் நிறுவனம் தற்போது பாதுகாப்பான கடன், லீஸ் சேவையில் இறங்க முடிவு செய்துள்ளது.
ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் இந்நிறுவனம் குத்தகைக்கு விடும் சேவையை இந்தியா முழுவதும் செய்யத் தனி நிறுவனத்தை உருவாக்குவதாகவும், இந்த நிறுவனத்தின் கீழ் DAAS சேவை அதாவது device-as-a-service வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்தப் பிரிவின் கீழ் ஜியோ பைனான்சியல் தனது ஏர்பைர், ஸ்மார்ட்போன்கள், லேப்டாப் ஆகியவைற்றைச் சப்ளை செயின் பைனான்ஸ் உடன் குத்தகைக்கு விட உள்ளது. இதேபோல் பங்குகளுக்கு எதிராகக் கடன், ஹோம் லோன் ஆகிய சேவைகளை வழங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் மொத்தமாக secured loans பிரிவு சேவைக்கு மாறுவதாகத் தெரிகிறது.
ஜியோ பைனான்சியல் நிறுவனத்தின் DAAS சேவையில் ரிஸ்க் மிகவும் குறைவு என்றாலும், வர்த்தக அளவு unsecured lending காட்டிலும் குறைவு தான். இதன் எதிரொலியாக ஜியோ பைனான்சியல் பங்குகள் தொடர்ந்து சரிந்து வருகிறது. இவை அனைத்திற்கும் முக்கியக் காரணம் ஆர்பிஐ அறிவிப்பு.. அப்படி என்ன அறிவிப்பு வெளியானது.
ஆர்பிஐ பிணையம் இல்லாமல் அளிக்கப்படும் கடன்களின் அளவு பெரிய அளவில் அதிகரித்துள்ள காரணத்தாலும், இதில் ரிஸ்க் அதிகமாக இருப்பதாலும் ஆர்பிஐ சமீபத்திய அறிவிப்பில் பாதுகாப்பற்ற தனிநபர் கடன், கன்ஸ்யூமர் கடனுக்கான ரிஸ்க் வெயிடேஜ் அளவை 100 சதவீதத்தில் இருந்து 125 சதவீதமாக உயர்த்தியது.
இதேபோல் கிரெடிட் கார்டுகளுக்கான ரிஸ்க் வெயிடேஜ் அளவு 125 சதவீதத்தில் இருந்து 150 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதன் மூலம் வங்கிகள்,NBFC மற்றும் நிதி நிறுவனங்கள் இத்தகைய கடன் சேவைகளுக்குக் கூடுதலான பாதுகாப்பு தொகையை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இதனால் நிதி நிறுவனங்கள் முன்பு போல் கடன்களை வாரி வழங்க முடியாது. இதேபோல் கடனை திருப்பிச் செலுத்தக் கூடிய நபர்களுக்குச் சிபில் ஸ்கோர் ஆகியவற்றைப் பார்த்துக் கணக்கிட்டு அதன் பின்பு தான் கடன் அளிக்கும். இதன் மூலம் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வாரா கடன் அளவு குறையும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications